நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஒரு செல்போன் நிறுவனத்தால் ஏற்பட போகும் போர்?.. சீனா அமெரிக்கா இடையே வெடித்த மோதல்!

அமெரிக்கா சீனா இடையே ஒரே ஒரு செல்போன் நிறுவனத்தால் பெரிய போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    USA Vs CHINA: அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் ஆபத்து இருக்காம்- வீடியோ

    நியூயார்க்: அமெரிக்கா சீனா இடையே ஒரே ஒரு செல்போன் நிறுவனத்தால் பெரிய போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அமெரிக்கா சீனா இடையே தற்போது வர்த்தகப் போர் நடந்து வருகிறது. அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் வழக்கத்தை சீனா வைத்து இருந்தது. இதற்கு பதிலடியாக தற்போது அமெரிக்கா சீனாவின் பொருட்களுக்கான வரியை உயர்த்தி உள்ளது.

    இதையடுத்து சீனா அமெரிக்கா மீது மேலும் வரி விதித்துள்ளது. இந்த நிலையில்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் தற்போது ஹுவாய் செல்போன் நிறுவனம் சிக்கி உள்ளது.

    தொடங்கியது வர்த்தகப் போர்.. அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் இதெல்லாம் நடக்குமாம்!தொடங்கியது வர்த்தகப் போர்.. அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் இதெல்லாம் நடக்குமாம்!

    ஏற்கனவே இப்படி

    ஏற்கனவே இப்படி

    கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் பாதுகாப்பு துறையின் தலைமையகமான பென்டகன் பெடரல் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதன்படி அமெரிக்க பாதுகாப்பு துறை, வெள்ளை மாளிகை, உளவுத்துறை ஆகிய முக்கிய துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் ஹுவாய் நிறுவன போன்களை பயன்படுத்த கூடாது என்று கூறியது.

    தடை விதித்தது

    தடை விதித்தது

    இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் மொத்தமாக ஹுவாய் நிறுவன போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹுவாய் நிறுவன போன்களை தங்களது நெட்வொர்க் பயன்பாட்டில் இருந்தே அமெரிக்கா நீக்கி உள்ளது. இனி அமெரிக்கர்கள் அந்த போனை பயன்படுத்த நினைத்தாலும் அதில் நெட்வொர்க் எடுக்காது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    இதற்கு டிரம்ப் நிறைய காரணங்களை சொல்லி இருக்கிறார். அதன்படி ஹுவாய் பாதுகாப்பு குறைபாடுகளை கொண்டு உள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு இது எதிரானது. அமெரிக்க மக்களின் ரகசிய தகவல்களை திருடி சீனாவில் இது விற்கிறது என்று டிரம்ப் கூறியுள்ளார். மக்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை கூட ஹுவாய் திருடுவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

    வேவு பார்க்கிறார்

    வேவு பார்க்கிறார்

    அதோடு அமெரிக்க மக்களை இது வேவு பார்க்கிறது. அதன் மூலம் ராணுவத்தின் திட்டங்களை ஹுவாய் தெரிந்து கொள்ள முடியும். சீனாவின் உளவு நிறுவனம் போல ஹுவாய் செயல்படுகிறது என்றும் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

    ஆனால் என்ன சொல்கிறார்கள்

    ஆனால் என்ன சொல்கிறார்கள்

    ஆனால் சீனா மீது இருக்கும் கோபத்தில் அமெரிக்கா ஹுவாய் நிறுவனத்துக்கு தடை விதித்து இருப்பதாக கூறுகிறார்கள். ஹுவாய் நிறுவனம் அமெரிக்காவில் வளர்ந்து நிற்கும் மிகப்பெரிய சீன நிறுவனம் ஆகும். அதை கட்டுப்படுத்தினால் வரிசையாக பிற சீன நிறுவனங்களை கட்டுப்படுத்தலாம் என்று அமெரிக்கா நினைப்பதாக கூறுகிறார்கள்.

    பதிலடி கொடுக்க முடிவு

    பதிலடி கொடுக்க முடிவு

    அதே சமயம் ஹுவாய் நிறுவனம் இதை மறுத்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று ஹுவாய் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு எப்போதும் கட்டுப்பட மாட்டோம் என்று ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    என்ன பதற்றம்

    என்ன பதற்றம்

    ஏற்கனவே நிலவி வரும் வர்த்தக போரை தற்போது ஹுவாய் பெரிதாக்கி உள்ளது. ஹுவாய் நிறுவனம் சீன நாட்டு அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர்களுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும். இதனால் இது இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    English summary
    Huawei Trade War: How a phone company will create a war between China and USA amid tensions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X