ஆழ்கடலில் ஒரு விசித்திர உயிரினம்.. உடல் முழுவதும் கண்ணாடியை மாதிரி.. என்ன இது? விஞ்ஞானிகள் 'ஷாக்'
நியூயார்க்: கடலின் மிக ஆழமான பகுதியில் வாழக்கூடிய ஒரு விசித்திரமான உயிரினத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடல் முழுவதும் கண்ணாடியை போல மிக அழகாக காணப்படும் இந்த உயிரினத்தை கண்டு விஞ்ஞானிகளே வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
மிகக் கொடூரமான மீன்களான சுறா, திமிங்கலம் வாழும் ஆழ் கடலில், அவற்றிடம் இருந்து தப்பித்து வாழ்வதற்காக இந்த உடல் தகவமைப்பை அந்த உயிரினம் பெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவக்கின்றனர்.

இயற்கையின் அதிசயம் 'கேமோஃப்ளெஜ்'
விலங்குகள், பறவைகளின் உலகம் அலாதியானது மட்டுமின்றி விசித்திரமானதும் கூட. மனிதர்களை போல வீடுகளில் வசிக்க முடியாத விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இயற்கையே தகவமைத்து தந்துள்ள தற்காப்பு அம்சங்கள், உண்மையிலேயே வியப்பை தரக்கூடியவை. இதுபோல்தான், சில உயிரினங்களுக்கு பிரத்யேகமான பாதுகாப்பு அம்சங்களை இயற்கை வழங்கி இருக்கிறது. அந்த அம்சங்களை கொண்ட விலங்குகளும், பறவைகளும் தங்களை அதன் மூலம் தற்காத்துக் கொள்ளும். அதை பயன்படுத்தி வேட்டையாடவும் செய்யும். அது விஷமாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகளிடம் இருந்து தன்னை மறைத்துக் கொள்ளக் கூடிய அம்சமாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர்தான் கேமோஃப்ளெஜ் (camouflage). அப்படியொரு உயிரினத்தை தான் ஆராய்ச்சியாளர்கள் கடலில் கண்டறிந்துள்ளனர்.

கண்ணாடி உடல்
அமெரிக்காவைச் சேர்ந்த கடல் ஆராய்ச்சியாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஆழ்கடலுக்குள் சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு ஆராய்ச்சியாளரின் முகத்தை உரசிக்கொண்டு ஒரு உயிரினம் சென்றது. ஆனால் அடுத்த நொடியே அது மறைந்துவிட்டது. பின்னர் மீண்டும் தென்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் ஒரு சிறிய வலையை பயன்படுத்தி அதை பிடித்துள்ளார். இதை பார்த்த அவர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். ஏனெனில் அதன் உடலே கண்ணாடியை போல இருந்துள்ளது.

மிக அரிய உயிரினம் சிஸ்டிசோமா
பின்னர், இந்த உயிரினத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. கண்ணாடி போல இருப்பதால், இதன் உடலுக்குள் இருக்கும் பாகங்கள் கூட தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கழுத்து பகுதியில் ஆரஞ்சு நிறத்தில் தெரிவது அதன் முட்டைகள் இருக்கும் பை ஆகும். இந்த உயிரினத்தை பார்த்த கடல் விஞ்ஞானிகள் இதன் பெயர் 'சிஸ்டிசோமா' என்றும், இது நண்டு, லாப்ஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்தது எனவும் கூறியுள்ளனர். ஆழ்கடலில் அதாவது 1000 மீட்டர் ஆழத்தில் இவை வாழக்கூடியவை. மிகவும் அரிய வகை உயிரினமாக இது கருதப்படுகிறது.

சுறாக்களுக்கே 'டாடா'
இந்த சிஸ்டிசோமாக்கள் சுறாக்களும், திமிங்கலம் வாழும் பகுதியில் வசிக்கக்கூடியவை. பொதுவாக, சுறாக்கள், திமிங்கலங்கள் இருக்கும் பகுதியில் சிறு உயிரினங்களால் வாழ முடியாது. ஏனெனில், அந்த மீன்களுக்கு இவை இரையாகிவிடும். ஆனால், சிஸ்டிசோமாக்கள் கண்ணாடி போல இருப்பதால், நீருடன் நீராக கலந்து பல நெடுங்காலங்களாக சுறாக்களுக்கும், திமிங்கலங்களுக்கும் இவை 'டிமிக்கி' கொடுத்து வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications