நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒயின் பாட்டிலை எலி கடிச்சி குடிச்சிருக்குப்பா..எப்படி தெரியுமாப்பா-கிறுகிறுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்

எலிகள் ஒயின் குடிக்குமா? என்று பலரும் கேட்கலாம். இதென்ன பிரமாதம் எங்க ஊர் எலி 1000 லிட்டர் சாராயமே குடிச்சிருக்கே என்று சொல்வார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்டாக் கடையில் ஒயின் பாட்டில்களை நாசப்படுத்தி சுவைத்து குடி

Google Oneindia Tamil News

நீலகிரி: மனிதர்கள் ரெட் ஒயின் அளவாக குடித்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதயம் பலப்படும் என்றெல்லாம் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த விசயம் எப்படி எலிகளுக்கு தெரியுமோ லாக்டவுன் காலத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடையில் இருந்த ஒயின் பாட்டில்களை கடித்து குதறி ஒரு துளி கூட விடாமல் சுவைத்து குடித்துள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அப்போது டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களுக்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

மீள்கிறது தமிழ்நாடு.. 4 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற பாதிப்பு.. 3867 பேர் பாதிப்பு.. 72 பேர் பலி!மீள்கிறது தமிழ்நாடு.. 4 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற பாதிப்பு.. 3867 பேர் பாதிப்பு.. 72 பேர் பலி!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் நீடித்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் தேங்காய் உடைத்து இன்று திறக்கப்பட்டன.

உடைந்த பாட்டில்

உடைந்த பாட்டில்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காளம்புழாபகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறந்த ஊழியர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஒயின் பாட்டில்களின் மூடி கடிக்கப்பட்டு துளி கூட மிச்சம் வைக்காமல் குடிக்கப்பட்டிருந்தது.

12 பாட்டில்கள் காலி

12 பாட்டில்கள் காலி

யார் இந்த வேலையை செய்தது என்று டாஸ்மாக் ஊழியர்கள் சோதனை செய்த போது திருமிகு எலியார்தான் இந்த வேலையை செய்திருப்பது தெரியவந்தது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 12 பாட்டில்களின் மூடிகளை கடித்து கீழே தள்ளி ஒயினை மிச்சம் வைக்காமல் சுவைத்துள்ளது தெரியவந்தது.

குஷியான எலிகள்

குஷியான எலிகள்

எலி குடித்த ஒயினின் மதிப்பு 2ஆயிரம் என கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தகவல் தெரிவிக்கவே, விசாரணை நடைபெற்று வருகிறது. மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடையில் புகுந்து எலிகள் ஒயின் குடித்து விட்டு குஷியாக ஆட்டம் போட்ட சம்பவம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தரமான சம்பவங்கள்

தரமான சம்பவங்கள்

இதென்ன பிரமாதம் இதை விட தரமான சம்பவங்கள் ஏற்கனவே பீகாரிலும் உத்தரபிரதேசத்திலும் நிகழ்ந்துள்ளன. அங்குள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய கேன்களின் கீழ் பகுதியை ஓட்டை போட்டு எலிகள் குடித்தது சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு எலிகள் கொஞ்சம் காஸ்ட்லியாக ஒயின் குடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. திருவாளர் எலியார் இன்னும் என்னென்ன குடிக்கப் போகிறாரோ தெரியலையே.

English summary
Rats have emptied 12 wine bottles kept in government-run TASMAC liquor outlet in a town near Gudalur in Nilgiris district. On being informed, the supervisor and senior TASMAC officials carried out an investigation, which revealed the presence of rats inside the shop, they said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X