பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏன் - தேர்தல் ஆணையம் விளக்கம்

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே முழுமையாக தெரிய வரும் என துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே முழுமையாக தெரிய வரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முடிவுகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

பீகார் சட்டசபைத் தேர்தலில் 4.11 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 5.30 மணிவரையிலான நிலவரப்படி 2.7 கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளதாகவும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் அதிகாரிகள் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

Bihar Election Final Results 2020 LIVE: 2.7 cr of 4.11 cr EVM votes counted says EC

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியும் நேரடியாக களம் கண்டது.

இந்த தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவுகள் கடந்த 7ம் தேதி முடிவடைந்தது. இதை தொடர்ந்து, இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிதிஷ்குமார் தலைமையிலான அணிக்கும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான அணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் இதுவரை 14 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் யார் யார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக 6, ஆர்ஜேடி 2, ஜேடியு 2, விஐபி 2, காங் 1, ஏஐஎம்ஐஎம் 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே முழுமையான தெரிய வரும் என துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட முடிவுகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பீகார் சட்டசபைத் தேர்தலில் 4.11 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 5.30 மணிவரையிலான நிலவரப்படி 2.7 கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளதாகவும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் அதிகாரிகள் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் துணை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

English summary
Bihar Election Final Results 2020 LIVE.The Election Commission has said that by 5.30 pm, 2.7 crore votes had been counted out of total 4.11 crore EVM votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X