புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதில்மேல் “பூனை”யாக ரங்கசாமி.. புதுச்சேரி ஆட்சி “கவிழ்கிறதா”? பாஜக “வலை”! அமித்ஷாவை சந்திக்க திட்டம்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் புதுச்சேரியில் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் செயல்பட்டு வருவது சிக்கலை உண்டாக்கி வருகிறது.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தியது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி. இதனை தொடர்ந்து முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி பதவியேற்றார்.

ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராகி சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலிலும் அவரால் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களை கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அசோக் கெலாட் vs சசி தரூர்.. சூடு பிடித்த காங்கிரஸ் தலைவர் தேர்தல்! யாருக்கு அதிக வாய்ப்பு? பின்னணி!அசோக் கெலாட் vs சசி தரூர்.. சூடு பிடித்த காங்கிரஸ் தலைவர் தேர்தல்! யாருக்கு அதிக வாய்ப்பு? பின்னணி!

முதலமைச்சரின் அதிகாரம்

முதலமைச்சரின் அதிகாரம்

துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக பேச்சு எழுந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியே "புதுச்சேரியின் சூப்பர் முதலமைச்சராக, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும், முதலமைச்சர்களாக அனைத்து அமைச்சர்களும் உள்ளார்கள்." என குற்றம்சாட்டினார்.

சுயேட்சை எம்.எல்.ஏ

சுயேட்சை எம்.எல்.ஏ

கடந்த ஆகஸ்டு மாதம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியையும், முதலமைச்சரையும் பாஜக எம்.எல்.ஏக்களும், பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் கடுமையாக விமர்சித்தனர். பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏவான "எனக்கு தெரியாமலேயே என்னுடைய தொகுதியில் கோயில் கமிட்டி, பால் கூட்டுறவு சங்கங்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கிறார்கள். நான் பாஜகவை ஆதரிக்கிறேன் என்பதால் அரசு இப்படி செய்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக எம்.எல்.ஏ

பாஜக எம்.எல்.ஏ

அப்போது பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், "அறநிலையத்துறை எம்.எல்.ஏக்களின் ஆலோசனையை கேட்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதே விதிமுறை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் இதை பின்பற்றுகிறார்கள். ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் இதை கடைபிடிக்கவில்லை. பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் என்பதற்காக பழிவாங்குகிறார்களா என்பதை இங்கேயே சொல்லிவிடுங்கள். நாங்கள் கையெழுத்து போட்டே முதல்வராக்கியுள்ளோம்." என்றார்.

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

இந்த நிலையில்தான் நேற்று காலை பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளன் சட்டப்பேரவை வாயில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது சட்டப்பேரவை அரசுக்கு எதிராக பேசிய பாஜக எம்.எல்.ஏவும் அங்காளனுக்கு ஆதரவாக அதே இடத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டார்.

 பாஜக ஆட்சி வேண்டும்

பாஜக ஆட்சி வேண்டும்

பாஜகவுக்கு தான் அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்பதால் தன்னையும், தன்னுடைய தொகுதியையும் முதலமைச்சர் புறக்கணிப்பதாக அங்காளன் குற்றம்சாட்டினார். புதுச்சேரியில் பாஜக வளர்வது ரங்கசாமிக்கு பிடிக்கவில்லை. மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது ஊழல் நடந்து இருக்கிறது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும். பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்.

 அமித்ஷாவை சந்திக்க திட்டம்

அமித்ஷாவை சந்திக்க திட்டம்

இது குறித்து பாஜக தலைவர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி வழங்க கோரி இருக்கிறோம். புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் அமித்ஷாவிடம் வலியுறுத்துவோம். என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பாஜக ஆட்சிக்கு வருவதையே விரும்புகிறோம்." என்றார். பாஜக எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசுகையில், "முதலமைச்சர் ரங்கசாமி தன்னை சுற்றியுள்ள நபர்கள் சொல்வதையே கேட்கிறார்." என்றார்.

English summary
In Puducherry, where the NR Congress-BJP alliance is in power, BJP and pro-BJP independent MLAs are continuously working against Chief Minister Rangaswamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X