புது டென்சன்! கம்பு, கற்களால் அடித்துக்கொண்ட என்.ஆர்.காங். - பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவாளர்கள்
புதுச்சேரி: ஏனாம் பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த என்.ஆர் காங்கிரஸாருக்கும் - பா.ஜ.க ஆதரவு சுயட்சை சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
Recommended Video
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துகு உட்பட்ட ஏனாம் பகுதி ஆந்திரா மாநிலம் அருகே அமைந்துள்ளது. இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயட்சை வேட்பாளர் கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் வெற்றி பெற்று பா.ஜ.கவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

பல நாள் பகை
இந்த தொகுதியில் கடந்த 5 முறை வெற்றிபெற்று முன்னாள் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணா ராவ் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளது, இந்நிலையில் மல்லாடி கிருஷ்ணாராவின் ஆதரவாளர்களுக்கும், பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினருமான கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆதரவாளர்களுக்கும் இடையே தேர்தல் முதலே மோதல் இருந்து வருகிறது.

கம்பு, கற்களால் தாக்குதல்
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஏனாம் தரியால்திப்பாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இருத்தரப்பினரும் ஒரே நேரத்தில் மாலை அனிவிக்க சென்றுள்ளனர். அப்போது இருதரப்பினரும் வாய் தகராறு ஏற்பட்டு சிறிது நேரத்தில் ஒருவரையொருவர் கற்கள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டுள்ளனர்.

வைரலாகும் வீடியோ
மோதல் குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மோதலில் ஈடுப்பட்ட இருதரப்பினரையும் கலைந்து போக செய்தனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் ஏனாம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆளும் கட்சி மற்றும் ஆளும் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏவின் ஆதரவாளர் என இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

புதுச்சேரி ஆளும் கூட்டணியில் மோதல்
புதுச்சேரியில் ஆளும் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசு பாஜக ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வருகிறது. ஆட்சி அமைத்த நாளில் இருந்து தற்போது வரை இருகட்சியினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமைச்சரவையில் இடம் ஒதுக்குவது தொடங்கி பல்வேறு பொறுப்புகளை பாஜகவுக்கு வழங்க ரங்கசாமி மறுத்து வருவதால் பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில், பாஜக கூட்டணி எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் - என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் இடையிலான இந்த மோதல் புதுச்சேரி அரசியலில் புதிய புயலை கிளப்பி இருக்கிறது.
-
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications