ஆம்புலன்ஸ் இல்லை.. டூவீலரில் தூக்கி சென்ற உறவினர்கள்! ராமேஸ்வரம் மாணவி கொலையில் கலங்கவைக்கும் தகவல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவியை இன்று 21 வயது இளைஞர் வழிமறித்து கத்தியால் குத்தி கொன்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஆட்டோ, ஆம்புலன்ஸ் வராததால் ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவியை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், ஆம்புலன்ஸ் வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றும் உறவினர்கள் கதறி அழுதது கலங்க வைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள சேராங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பெயர் கவிதா. இந்த தம்பதிக்கு ஷாலினி என்ற மகள் இருந்தார்.
இவருக்கு வயது 17. இவர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிப்பை படித்து வந்தார். இந்த மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் (வயது 21) என்பவர் காதல் தொல்லை கொடுத்துள்ளார்.

மீனவரான முனிராஜ், அடிக்கடி மாணவியை வழிமறித்து தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால் மாணவி, அவரது காதலை ஏற்கவில்லை. இந்நிலையில் தான் தொடர் தொல்லையால் மாணவி தனது பெற்றோரிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் முனிராஜ் வீட்டுக்கு சென்று அவரை திட்டி கண்டித்துள்ளனர்.
இதனால் கோபமான முனிராஜ் இன்று காலையில் பள்ளிக்கு நடந்து சென்ற மாணவி ஷாலினியை வழிமறித்து தகராறு செய்துள்ளார். கத்தியால் அவரை குத்திவிட்டு ஓடியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவியை அங்கிருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏற்றி ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு ஷாலினியின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே தான் மாணவியை கொலை செய்த முனிராஜை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தான் ஆட்டோ அல்லது ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வந்திருந்தால் மாணவியை காப்பாற்றி இருக்கலாம் என்று உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி மாணவியின் உறவினர்கள் கூறியதாவது:
நடந்து பள்ளிக்கூடம் சென்று வந்த பிள்ளையை ஆங்காங்கே நின்று கொண்டு கிண்டல் செய்து வந்துள்ளார். லவ் பண்றேன்.. லவ் பண்றேன்.. என்று தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவரை திட்டி கண்டித்தோம். இன்று பள்ளிக்கு சென்ற பிள்ளையை இப்படி பண்ணிட்டான். கழுத்தை அறுத்து கழுத்தின் பின்பகுதியில் கத்தியால் குத்தி உள்ளான்.
கூட சென்ற பிள்ளைகள் அனைவரும் ஓடி சென்று எங்களின் அண்ணன், அண்ணியிடம் சொல்லி இருக்காங்க. அதன்பிறகு தான் ஆட்டோவை அழைத்தோம். ஆட்டோ வரவில்லை. ஆம்புலன்சும் வரவில்லை. ஆட்டோ அல்லது ஆம்புலன்ஸ் வந்திருந்தால் எங்க பிள்ளை பிழைத்து இருக்கும். ரத்தம் வடிய வடிய பிள்ளையை மோட்டார் சைக்கிளில் தூக்கிட்டு வந்து இருக்காங்க..
ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லை. நர்ஸ் இல்லை. எதுக்கு இந்த பெரிய ஆஸ்பத்திரி இருக்குதுனு கேட்கிறேன். எப்போது வந்தாலும் ராம்நாடு (ராமநாதபுரம்) போ என்று சொல்றாங்க. லேசான காய்ச்சலுக்கு வந்தாலும் ராம்நாடு போ-னு தான் சொல்றாங்க.அப்புறம் ஏன் இந்த ஆஸ்பத்திரி இருக்கு'' என்று கதறி அழுதபடி கூறினர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications