சேலத்தில் ரூ.261 கோடி மதிப்பு நலத்திட்டங்கள்... நாளை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
சேலம்: சேலத்தில் 261 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இதனை தெரிவித்தார்.
சீலநாயக்கன்பட்டியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதாகவும் கே.என். நேரு தெரிவித்தார்..

ரூ.261 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவித்தார். அரசு கட்டிடங்கள் திறப்பு, புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல், நலத்திட்ட உதவிகள் என ரூ.261 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தெரிவித்த அமைச்சர் கே.என். நேரு, 12 அரசு துறைகள் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 38.52 கோடி ரூபாய் மதிப்பிலான 83 திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகவும், 6 அரசு துறைகள் சார்பில் 54 கோடி ரூபாய் மதிப்பிலான 60 பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

புறவழிச்சாலை நெரிசலுக்கு தீர்வு
மேலும் சேலம் புறவழிச்சாலையில் அடிக்கடி போக்குவரத் நெரிசல் ஏற்படுவதாகவும், அதற்குக் காரணம் அங்கிருக்கும் ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என்றும் புகார்கள் வந்துள்ளது. எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். மேலும் சேலம் மாவட்டத்தில் ரிங் ரோடு அமைப்பது, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, ஐடி பூங்கா செயல்பாடுகள், பனமரத்துப்பட்டி ஏரி சீரமைப்பு உள்ளிட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளது என கூறி அமைச்சர் கே.என். நேரு இந்த கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

விரைவில் தீர்வு
மேலும் சேலம் மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளில் எந்த திட்டங்கள் உடனடியாக நிறைவேற்ற வாய்ப்புள்ளதோ அந்த திட்டங்கள் தொடங்கப்படும் என்றும் ஏதேனும் நிர்வாக ரீதியாக சிக்கல்கள் இருந்தால் அந்த திட்டங்களை தொடங்கள் சிறிது காலம் அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் சேலத்தில் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளரிடம் தெரிவித்தார்.

முன்னாள் எம்எல்ஏ படம் திறப்பு
சேலம் மாவட்த்தில் அரசு விழாவில் பங்கேற்றபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா படத்திறப்பு விழாவிலும் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications