சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தென்னாப்பிரிக்கா மாதிரியே.. சிங்கப்பூரில் ஓமிக்ரான் தொற்று உச்சம் தொடும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

By
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: தென்னாப்பிரிக்கா போல் சிங்கப்பூரிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதிய உச்சத்தைத் தொடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த புத்தாண்டுக்குப் பிறகு கொரோனா பரவல் உலக அளவில் அதிகமாகப் பரவிவருகிறது. அதோடு ஒமிக்ரான் தொற்றும் சேர்ந்தே பரவுவதால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன.

2019 சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி பல உயிர்களை பலிகொண்டது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த வைரஸ் தொற்றில் இருந்து முழுவதுமாக விடுபட முடியவில்லை. ஆனால் வைரஸ் உருமாறி பெயர்மாறி வந்து ஆட்டிப்படைக்கிறது.

ஷாக்! இந்தியாவில் ஒரே வாரத்தில் 40% அதிகரித்த கொரோனா.. அதுவும் இந்த 3 மாநிலங்கள்தான் டாப்! ஷாக்! இந்தியாவில் ஒரே வாரத்தில் 40% அதிகரித்த கொரோனா.. அதுவும் இந்த 3 மாநிலங்கள்தான் டாப்!

கொரோனா தொற்றுக்குப்பிறகு டெல்டா என உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. வேகமாகப் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது டெல்டா. தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. இது டெல்டாவைவிட அதிவேகமாக பரவி வருகிறது.

 சிங்கப்பூர்

சிங்கப்பூர்

ஒமிக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. ஒமிக்ரான் தொற்று வேகமக பரவுகிறது. சிங்கப்பூரைப் பொருத்தவரை ஒமிக்ரான் விரைவில் புதிய உச்சத்தை எட்டும் என கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். ஒவ்வொரு 10 பேரில் 5 பேர் பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.

 அதிகரிக்கும் பரவல்

அதிகரிக்கும் பரவல்

சிங்கப்பூரில் ஒமிக்ரான் வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது. தற்போது சுமார் எழுநூறு பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதில் 541 பேருக்கு உள்நாட்டிலேயே ஒமைக்ரான் வைரஸ் பரவியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு ஒமிக்ரான் பரவியதை போல சிங்கப்பூரிலும் ஒமிக்ரான் வகை தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என தொற்று நோயியல் நிபுணர் அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சிங்கப்பூரில் தினசரி ஒமிக்ரான் பாதிப்பு 15 ஆயிரமாக அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடுகள் கடுமையானால் ஒமிக்ரான் குறையும் என்ற ரீதியில் நிபுணர் தெரிவித்திருக்கிறார். இதனால் சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கடுமையாகலாம்.

Recommended Video

    Cyprus நாட்டில் பரவும் புதிய Variant Coronavirus.. Deltacron குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
     அனைவரும் பாதிப்பு

    அனைவரும் பாதிப்பு

    ஒவ்வொருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஏற்படும். பலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு வந்துபோனதே தெரியாது என்று மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஒமிக்ரானால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொருக்கும் இந்த நோய் தொற்று நிச்சயமாக வந்து செல்லும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    The Omicron virus is spreading rapidly in Singapore. The Omicron infection in Singapore has been found to touch new heights.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X