எங்கு திரும்பினாலும் புதிய கார்கள்.. சிங்கப்பூரில் பழைய கார்களையே பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டில் உங்களால் பழைய கார்களையே பார்க்க முடியாது. அந்தக் குட்டி நாட்டில் எந்தப் பக்கம் நீங்கள் போனாலும் புத்தம் புதிய கார்களையே பார்ப்பீர்கள்.. இதற்கு என்ன காரணம்.. அங்கு ஏன் யாரிடமும் பழைய கார்கள் இல்லை.. இதற்குப் பின்னால் எதாவது காரம் இருக்கிறதா என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தெற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் மக்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்து முறையையே பயன்படுத்துவார்கள். அங்குக் காரை ரொம்ப அரிதாகவே பார்க்க முடியும். அதிலும் கூட புதிய கார்களையே பார்க்க முடியும். அங்கு எந்தப் பக்கம் நீங்கள் போனாலும் புத்தம் புதிய கார்களே இருக்கும்..

சிங்கப்பூர்
அங்க என்ன எல்லாருமே பணக்காரர்களா? யாருமே பழைய காரை வைத்திருக்க மாட்டார்களா என்ற கேள்விக்குப் பலருக்கும் வரும். அங்கு வசிக்கும் அனைவரும் பணக்காரர்களா இல்லையா என்பது வேறு விவாதம்.. ஆனால், அங்கு வசிக்கும் பெரும் பணக்காரர்களால் மட்டுமே அங்குக் காரை வாங்க முடியும். காரணம் சிங்கப்பூரின் சட்ட திட்டங்கள் தான்.
சிங்கப்பூர் ஒரு குட்டி நாடு. அதேநேரம் ஜன நெருக்கடி அதிகம். இதனால் அங்கு வசிக்கும் அனைவருமே கார்களை வாங்கினால் டிராபிக் உச்சத்திற்குப் போய்விடும். இதனால் பொது போக்குவரத்தையே அந்நாட்டு அரசு ஊக்குவிக்கும். மேலும், கார் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஒரு கடுமையான கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கினர். அதுதான் கார்களுக்கான COE உரிமை சான்றிதழ்!
உரிமம்
அங்கு வசிக்கும் ஒருவர் கார் வாங்க வேண்டும் என்றால் இந்த COE சான்றிதழை ஏலம் எடுக்க வேண்டும். அதற்கே நீங்கள் பெரிய தொகையைச் செலவிட வேண்டும். இந்த உரிமத்தை வாங்க கார் வகையைப் பொறுத்து ரூ.50 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரையிலும் செலவாகும். இது காருக்கான தொகை இல்லை.. அந்த உரிமத்தை வாங்குவதற்கான தொகை மட்டுமே!
அடுத்த சிக்கல்
ஆனால், அந்தச் சான்றிதழும் கூட உங்களுக்குச் சரியாக 10 ஆண்டுகளுக்கு மட்டுமே காரை பயன்படுத்தும் உரிமை உங்களுக்கு அளிக்கிறது. 10 ஆண்டுகள் முடிந்த பிறகு அடுத்த சிக்கல் வரும். அதே காரைத் தொடர்ந்து நீங்கள் வைத்திருக்க வேண்டுமானால் Prevailing Quota Premium செலுத்தி உங்கள் சிஓஇ சான்றிதழை 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். இது வழக்கமான சிஓசி சான்றிதழ் ரேட்டை விடவும் அதிகமாகவே இருக்கும். அந்தத் தொகை பல நேரம் பழைய காரின் சந்தை மதிப்பையும் விட அதிகமாக இருக்கும்.
இதுதான் காரணம்
இதன் காரணமாகவே அங்குப் பெரும்பாலான உரிமையாளர்கள் பழைய காரை வைத்திருக்க மாட்டார்கள். பழைய காரை விற்றுவிட்டு புதிய காரை வாங்கிவிடுவார்கள். பழைய கார் இருந்தால் காற்று மாசு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படும். இதனால் சிங்கப்பூர் அரசும் கூட 10 வருடப் பழைய காரை மாற்றுவதையே ஊக்குவிக்கிறது. இதற்காகக் கூடுதல் பதிவு கட்டணத் தள்ளுபடி என்ற திட்டத்தையும் வைத்துள்ளனர். அதாவது பழைய காரை கொடுத்துவிட்டு புது கார் வாங்குவோருக்கு, பழைய காருக்கு செலுத்தப்பட்ட வரியில் பெரும்பகுதி திரும்பக் கிடைக்கும். இதுவே அங்குப் பலரும் கார்களை 10 ஆண்டுகளில் மாற்ற ஊக்குவிக்கிறது.
மேலும், அங்குப் பழைய கார்களுக்கு செலவுகளும் அதிகரிக்கின்றன. கார் 10 ஆண்டுகளைக் கடந்த பிறகு, சாலை வரிகள் 10% முதல் 50% வரை உயர்கின்றன. மேலும், சிங்கப்பூரின் கடுமையான ஆய்வுகள், பராமரிப்பு, எமிஷன் விதிமுறைகளுக்கு ஏற்ப பராமரிக்கவும் வேண்டும். இப்படி 10 ஆண்டு பழைய கார்களுக்கான செலவுகள் அதிகரிப்பதாலேயே அங்குப் பலரும் புதிய கார்களையே வைத்திருக்கிறார்கள்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications