காரைக்குடி அருகே பெரியார் சிலை அகற்றம் சர்ச்சை.. டிஎஸ்பி, தாசில்தார் மீது அதிரடி நடவடிக்கை!
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தனியார் இடத்தில் பெரியார் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை வருவாய்த்துறையினர் அகற்றியது தொடர்பான விவகாரத்தில் வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவினர் புகார் அளித்த நிலையில், தனது சொந்த இடத்தில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி அமைத்திருந்த பெரியார் சிலை அகற்றப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையில் முக்கிய பணியில் இருந்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் பெரியார் சிலை
காரைக்குடியை சேர்ந்த இளங்கோவன் என்பவர், திருமயம் பி.எச்.இ.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் திராவிடர் விடுதலை கழகத்தில் உறுப்பினராக இருக்கிறார். இவர் கோட்டையூரில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டில் மார்பளவு பெரியார் சிலை ஒன்றை அமைத்திருந்தார். சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்து வந்த நிலையில், பெரியார் சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகிகள் சிலர் பள்ளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிலை அகற்றம்
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் பண்ணை வீட்டுக்கு அருகில் உள்ள இந்த வீட்டின் சுற்றுச்சுவருக்கு உள்ளே பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், சிலையை அகற்றினர். சிலை அகற்றப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

அதிகாரிகள் பணியிட மாற்றம்
தனியார் இடத்தில் சிலை வைக்கலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ள நிலையில், காவல்துறையின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டில் நிறுவப்பட்ட பெரியார் சிலையை அகற்றிய வட்டாட்சியர் கண்ணன், டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலையை நிறுவ கடைபிடிக்க வேண்டிய சட்டவிதிகளை சரியாக புரிந்துகொள்ளாமல் சிலையை அகற்றியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கை
காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன் சிவகங்கை வனத்திட்ட அலுவலராக பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதேபோல், தேவகோட்டையில் காவல்துறை பொறுப்பு துணை கண்காணிப்பாளராக இருந்த கணேஷ்குமார் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications