சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாத்தா கிரேட் எஸ்கேப்.. பாக்கெட் கத்தியை வைத்தே.. முதலையிடம் இருந்து தப்பிய அதிசயம்..!

முதலையை கத்தியால் குத்திய நபர் உயிர் தப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சிட்னி: முதலையிடம் சிக்கிய நபர், ஒரு சாதாரண பாக்கெட் கத்தியை கொண்டு குத்திவிட்டு தப்பி ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கேப் யார்க் பெனின்சுலா என்ற பகுதியை சேர்ந்தவர் ஹோப் வேலே... 60 வயதாகிறது.. இவர் ஒருநாள் அங்கிருந்த ஆற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது திடீரென அந்த ஆற்றில் இருந்த முதலை வெளியே வந்துவிட்டது.. அந்த தாத்தாவை நெருங்கி வந்து கெட்டியாக பிடித்து கொண்டது..

ஹை அலர்ட்.. சென்னையை நோக்கி வேகமாக நெருங்கும் கருமேக கூட்டம்.. சாட்டிலைட் படத்தை பாருங்க! ஹை அலர்ட்.. சென்னையை நோக்கி வேகமாக நெருங்கும் கருமேக கூட்டம்.. சாட்டிலைட் படத்தை பாருங்க!

முதலை

முதலை

இதனால் அவர் நிலைகுலைந்து போனார்... அந்த முதலை அவரை பிடித்து இழுத்துள்ளது.. அதனால், பதறிப்போனஅவர் பக்கத்தில் கரையோரத்தில் இருந்த ஒரு மரத்தை பிடித்து தப்பித்து கொள்ள முயன்றுள்ளார்.. ஆனால் முதலை அதற்குள் பின்னாடியே வந்து அவரை தன்பக்கம் இழுத்து கொண்டது. இதில் தடுமாறி ஆற்றுக்குள்ளேயே விழுந்தார்..

தாக்குதல்

தாக்குதல்

சுற்றிலும் யாரும் இல்லாத நிலையில், எப்படியாவது அங்கிருந்து தப்ப வேண்டும் என்று நினைத்தார்.. ஆனால் அவர் கைவசம் ஒரே ஒரு பாக்கெட் கத்தி மட்டுமே இருந்தது... வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல், அந்த கத்தியை எடுத்து முதலை சரமாரியாக தாக்க துவங்கினார்.. அதன் வாயிலும், கண்ணிலும் மாறிமாறி குத்தினார்.. பிறகு அதன் தலையிலும் ஓங்கி குத்தினார்.

 காயங்கள்

காயங்கள்

இதனால் முதலை தடுமாறிவிட்டது.. உடம்பெல்லாம் ஆங்காங்கே ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது... அதேபோல தாத்தாவின் உடம்பிலும் ரத்தம் கொட்டியது.. இதுதான் சாக்கு என்று நினைத்து ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி ஓடினார்.. அவராகவே ஒரு மருத்துவமனையில் போய் சேர்ந்தார்... உடனடியாக சிகிச்சையும் தரப்பட்ட நிலையில், தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதல்

தாக்குதல்

இதை பற்றி அங்கிருந்த வனத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "இந்த பகுதியில் நிறைய முதலை உள்ளது.. ஆனாலும் தனியாகவே அந்த முதியவர் முதலையுடன் போராடியுள்ளார்... அவர் தாக்கிய அந்த முதலை 4 அடி நீளம் கொண்டது... அவர் உயிர் பிழைத்ததே பெரிய அதிர்ஷ்டம்தான்" என்கிறார். ஒருவேளை தாத்தா முதலையை கத்தியால் குத்தாமல் இருந்தால், நிச்சயம் தாத்தாவை விழுங்கி இருக்குமாம்.

 எடை

எடை

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை முதலைகள் அதிகம் இருக்கும் பகுதி.. கடந்த 1971-ல் இருந்தே அதிக எண்ணிக்கையான முதலைகள் அங்கு உண்டு.. ஒவ்வொன்றும் ஒரு டன்னுக்கு மேல் எடை கொண்டது.. 7 மீட்டர் நீளம் வரை வளர கூடியது... இங்குள்ள நீர்நிலைகளில் முதலைகள் எப்போதுமே இருக்கும் என்பதால்தான் ஆஸ்திரேலியர்கள் முதலைகளிடம் சிக்காமல் உஷாராக இருப்பார்களாம்.. தாத்தா மட்டும்தான் எப்படியோ சிக்கிவிட்டார்.. தப்பியும் விட்டார்..!

English summary
Australia old man escapes from crocodile with a small knife
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X