திண்டிவனம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகமாக சென்ற கார் தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை மீது திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தேசிய நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலைகளில் வாகனங்களில் செல்வோர் அதிக வேகமாக செல்கின்றனர். இதனாலேயே விபத்துகள் நேரிடுவதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

4 killed in a road accident near Tindivanam

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை விபத்தில் சிக்கி பலர் உயிரிழக்கின்றனர். விபத்துகளை தடுக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Four members of a family were killed in an accident near Tindivanam on Tuesday.
Please Wait while comments are loading...