எனக்கு அசம்பாவிதம் நேர்ந்தால்... அதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்- சிம்பு கெத்து #UniteForHumanity

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிம்புவின் கோரிக்கையை ஏற்ற கன்னடர்கள் நெகிழ்ச்சி வீடியோ

  சென்னை: காவிரி விவகாரத்தில் கருத்து கூறிய எனக்கு எதிராக ஏதாவது நேர்ந்தால் அதை பார்க்கும் தமிழர்கள், கன்னடர்கள் என இந்திய மக்கள் அனைவரும் என் முன்னால் நிற்பர் என்று சிம்பு தெரிவித்தார்.

  காவிரி நீர் கொடுப்பது குறித்த சிம்புவின் பேச்சு கர்நாடக மக்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை ஏற்று மக்கள் தண்ணீர் தர தயார் என்று கூறிய வீடியோக்களை அனுப்பியுள்ளனர்.

  இதுகுறித்து சிம்பு கர்நாடக டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் ரஜினி, கமல் அரசியல் குறித்து கேட்கிறீர்கள். யாரும் யாரையும் எதிர்க்கக் கூடாது. அவர்களுக்கு ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து சில கருத்துகளை நல்ல விதமாக கூறினாலும் அவர்களுக்கு கெட்ட பெயரை கொடுக்கிறது. அரசியல் ரீதியான விளையாட்டுகளால் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மற்றபடி அவர்களை ஆதரிக்க யாருக்கும் பிரச்சினை இல்லை. அரசியல் ரிதீயிலான விளையாட்டுகளையும் சமூகத்தையும் புரிந்து கொண்டால் போதும்.

  கன்னடர்களை ஆதரிக்கவில்லை

  கன்னடர்களை ஆதரிக்கவில்லை

  கங்கை, காவிரி, யமுனா ஆகியோரின் பிள்ளைகளாக நாம் இருக்கிறோம். அந்த தாய்கள் எந்த பிள்ளையிடமும் பாகுபாடு காட்டமாட்டார் என்பதை நான் ஏற்கிறோம். ஆனால் ஒரு சில ஊழல் அரசியல்வாதிகள் மக்களின் மனதை மாற்றுகின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இவர்களின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும். நான் கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளேனா. நான் கன்னடர் அல்ல, பக்கா தமிழன். நான் கன்னடர்களை ஆதரிக்கவில்லை, மனிதாபிமானத்தை மட்டும் ஆதரிக்கிறேன்.

  அரசியல்வாதிகளின் வேலை

  அரசியல்வாதிகளின் வேலை

  கன்னடர்கள் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோவை பார்த்த தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வுபூர்வமாக உள்ளனர். நான் கன்னடர்களிடம் தண்ணீருக்காக கெஞ்சுகிறேன் என்று சில தமிழர்கள் கூறிவது, இரு மாநில மக்களுக்கும் நடைபெறும் நல்லதை கெடுப்பதற்கான முயற்சியாகும். நல்லது நடந்து விட்டால் அவர்களுக்கு பிரச்சினையாகிவிடும். அதனால் என்னை பற்றி அவ்வாறு கூறுகின்றனர். அதனால் மக்களின் மனதை நீர்த்து போக செய்கின்றனர். ஆனால் அதையும் தாண்டி பெரும்பாலான மக்கள் உண்மையை புரிந்து கொண்டுள்ளனர். மனிதாபிமானத்துடன் மக்கள் இருக்கும் போது நாம் தவறாக பேசுபவர்கள் குறித்து கண்டு கொள்ளக் கூடாது.

  ஏன் கவலைப்பட வேண்டும்

  ஏன் கவலைப்பட வேண்டும்

  எனது கருத்துகளால் எனக்கு வருங்காலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்ன நடக்கும் என்கிறீர்கள். மனிதன் என்ற அடிப்படையில் நான் மக்களுக்கு நல்லது செய்யவே முயற்சிக்கிறேன். அதையும் தாண்டி எனக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தமிழர்கள், கன்னடர்கள் மட்டுமல்லாமல் மனிதாபிமானத்தில் நம்பிக்கையுடைய இந்திய மக்கள் அனைவரும் எனக்காக நிற்பர். அப்படியிருக்கும் நான் ஏன் எனக்கு ஏற்படும் அசம்பாவிதம் குறித்து கவலைப்பட வேண்டும்.

  உடைக்க வேண்டும்

  உடைக்க வேண்டும்

  மக்களின் மனநிலையை மாற்றுவது அத்தனை சுலபம் இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து கன்னடர்கள் இது போன்று செய்து தமிழர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டனர். மக்கள் என்ன செய்ய வேண்டும் என முயற்சிக்கிறார்களோ அவர்களுடன் கடவுள் துணையாக இருப்பார். அதனால்தான் இந்த மன மாற்றம் சுலபமாக நடந்து விட்டது. இந்த பிரச்சினைகளை எப்போது உடைக்க வேண்டும் என்று கடவுள் முடிவு எடுத்துவிட்டால் அதை செய்துமுடித்துவிடுவார்.

  மக்களுக்காக துணை

  மக்களுக்காக துணை

  மனிதாபிமானத்தை மதித்த அனைத்து மக்களுக்கு நன்றி. இரு மாநில மக்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து நமக்கு நல்லதை செய்ய வேண்டும். நல்லது நடக்க வேண்டும் என்றால் இதை வருங்காலத்திலும் வலியுறுத்துவேன். அதற்காக நான் அரசியல்வாதியோ, தலைவரோ , என் பின்னால் வாருங்கள் என்றோ கூறமாட்டேன், மக்களுடன் மக்களாக துணையிருப்பேன் என்றார் சிம்பு.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Simbu says that i dont care about wrong doings happens for me because of talking about Cauvery issue.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற