For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சட்டசபை மாண்பை தொலைத்த திமுக" - போட்டி பொதுக்கூட்டம் நடத்துகிறது அதிமுக!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரை முன்வைத்து திமுக நடத்தி வரும் பொதுக்கூட்டத்துக்கு போட்டியாக கூட்டங்களை நடத்த அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தில் திமுகவினரை விமர்சிப்பதை அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் வாடிக்கையாக வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது திமுக எம்.எல்.ஏக்களின் அன்றாட நடவடிக்கையாகிப் போனது.

நாள்தோறும் வெளிநடப்பு அல்லது வெளியேற்றம் என்ற தொடர் கதையின் உச்சமாக கூட்டத் தொடர் முழுவதும் திமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

'சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு'

'சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு'

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில், 'சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பு

கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பு

சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மதுரை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இதேபோல் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.

'சட்டசபை மாண்பை தொலைத்த திமுக'

'சட்டசபை மாண்பை தொலைத்த திமுக'

இந்த நிலையில் திமுகவுக்கு பதிலடி கொடுக்க 'சட்டசபை மாண்பை தொலைத்த திமுக' என்ற தலைப்பில் போட்டி கூட்டங்களை நடத்த அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

சாதனை விளக்க பொதுக்கூட்டம்

சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மேலும் 3 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களையும் நடத்துவதற்கும் அதிமுக மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

கனஜோர் ஏற்பாடுகள்

கனஜோர் ஏற்பாடுகள்

இதனால் குஷியாகிப் போன அதிமுக தொண்டர்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு கனஜோராக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

English summary
After the DMK's 'Perils of Democracy in Tamil Nadu Assembly" meetings now AIADMK cadres organising Public meetings against DMK Mlas irresponsible actions in TN assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X