• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகை தொப்புளில்தான் பம்பரம் விடுவேன் என அடம்பிடித்தார் விஜயகாந்த்: இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்!

By Mayura Akilan
|

சென்னை: தேர்தல் பிரசார களத்தில் நடிகர், நடிகையர்களின் பிரச்சாரம் கலகலப்பாகவும், சில இடங்களில் கமெடியாகவும், சில இடங்களில் சூட்டைக் கிளப்புவதாகவும் உள்ளது.

எதிர்கட்சியினரை குறை கூறி பேசுவதை விட ஆளுங்கட்சியின் ஆடு, மாடு திட்டத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பி விலங்குகளின் கொள்கைப் பரப்பு செயலாளராகிவிட்டார் ராமராஜன்.

இவரோடு சிங்கமுத்து, பொன்னம்பலம், ஆனந்தராஜ், பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, அனிதாகுப்புசாமி, என 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக களமிறங்கியுள்ளனர். அவர்களின் பிரசாரத்தை தொகுத்து வெற்றி முழக்கம் என ஒளிபரப்புகிறது ஜெயா டிவி.

எதிர்கட்சியினர், அதிமுகவின் இலவச ஆடு, மாடு, திட்டத்தை கிண்டல் செய்து பேசும் போது அதற்கு போகும் இடமெங்கும் கவுன்டர் கொடுக்கிறார் இந்த பசு நேசன்.

ஜிலு ஜிலு உடையில்

ஜிலு ஜிலு உடையில்

ராமராஜன், தக தக தக என ஜிலு சட்டையில் அதுவும் கண்ணைப் பறிக்கும் பச்சை, மஞ்சள், ரோஸ் என அணிந்து வந்து பிரசாரம் செய்வது தனி குஷிதான்.

மாட்டைப் பத்தி பேசாதே

மாட்டைப் பத்தி பேசாதே

அம்மா மாடு கொடுத்தாங்க... ஆடு கொடுத்தாங்கன்னு எல்லோரும் பேசுறாங்க... மாட்டை பத்தி மட்டும் பேசதீங்க... எனக்கு கெட்ட கோபம் வரும். பசுமாடு வந்து காமதேனு... அது பால் கொடுக்கும்.

பாட்டுப் பாடுங்க

பாட்டுப் பாடுங்க

பால் கறக்கும் போது.... செண்பகமே... செண்பகமே.... அப்படின்னு பாடுங்க... அரைலிட்டர் பால் அதிகமா கரக்கும்.

ஒரே சிங்கம்தான்

ஒரே சிங்கம்தான்

தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வைத்த காலை எப்போதும் பின் வைக்க மாட்டார். சினிமாவில் வேண்டுமானால் சிங்கம் 1, சிங்கம் 2 வரலாம். ஆனால் அரசியலில் ஒரே சிங்கம் முதல்வர் ஜெயலலிதா தான் என்று பேசுகிறார் ராமராஜன்.

ப்ப்பா விந்தியாவா? இது

ப்ப்பா விந்தியாவா? இது

அதிமுகவின் மற்றொரு நட்சத்திர பேச்சாளர் விந்தியா, விஜயகாந்தை பற்றித்தான் விளாசுகிறார். அவர கேப்டன்... கேப்டன்னு சொல்றாங்க... அவர் என்ன மிலிட்டரியிலயா இருந்தாரு? என்று கேட்கிறார் விந்தியா.( உன்னைய கூடத்தான் நடிகை விந்தியாங்கிறாங்க... நீ எங்கமா நடிச்சே? என்று இணையதளங்களில் வாரி குவிக்கின்றனர்.

நல்ல வேலை தப்பிச்சோம்

நல்ல வேலை தப்பிச்சோம்

போன சட்டமன்ற தேர்தல்ல விஜயகாந்தை கூட்டணி சேர்த்து ஜெயிக்க வைத்த அம்மா, எதிர்கட்சி தலைவராக்கினார். நல்லவேலை அவர் அரசியல்வாதியாகி ஜெயித்தார். நாம தப்பிச்சோம். இல்லைன்னா இன்னும் 5 படம் நடிச்சு நம்மளை கொன்றுருப்பார் என்கிறார். பாவம் வாய்ப்பு கிடைக்காத கோபம் இப்படி கொந்தளிக்க வைக்கிறது.

இப்பவும் பம்பரம் வச்சிருக்கார்

இப்பவும் பம்பரம் வச்சிருக்கார்

அதேபோல மற்றொரு அதிமுக பேச்சாளர் ஆர்.வி. உதயகுமார், சின்னக்கவுண்டரில் விஜயகாந்தை நடிக்க வைத்த கதையை பேசுகிறார். பம்பரம் சீனை கூறிய உதயகுமார், நான் சொன்னது வேறு.... ஆனால் விஜயகாந்தோ நடிகையின் தொப்புளில்தான் பம்பரம் விடுவேன் என்று அடம்பிடித்தார். இப்போதும் கையில் பம்பரம் வைத்திருக்கிறார். அதை எங்கே விடப்போகிறாரோ என்று கேட்கிறார்.

யாராலும் தடுக்க முடியாது

யாராலும் தடுக்க முடியாது

நடிகர் செந்தில் பேசுவது தனி ஸ்டைல் 'அம்மா அடுத்து பிரதமராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த கருணாநிதி என்னைக்குமே மக்களுக்கு நன்மை செஞ்சது கிடையாது. குடும்பத்துக்கு சொத்து சேர்க்கிறதிலதான் குறியா இருக்காங்க.

அழகிரியா? கொலைகிரியா?

அழகிரியா? கொலைகிரியா?

மதுரையில ஒருத்தர் இருக்கார் அழகிரின்னு, அவரு அழகிரியில்லை, கொலைகிரி. அண்ணன், தம்பிக்குள்ளேயே அடிச்சுக்கிறாங்க. அவங்க எப்படியும் போகட்டும். அதைப்பத்தி நான் ஒண்ணும் சொல்லலை. ஆனா, அம்மா பிரதமரா வருவதற்கு மோடியே நாளைக்கு ஆதரிப்பார்''

அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்…

அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்…

அதிமுகவின் பேச்சாளர் சிங்கமுத்து, ''என்ன வேணும்? எண்ணெய் வேணும்'' என்று ஆரம்பிக்கும்போதே கூட்டம் கலகலப்பாகிவிடுகிறது. ''காங்கிரசுக்காரன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான், தி.மு.க.காரன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான், இந்த நாக்கைக் கடிச்சுக்கிட்டு அலையிறானே... அவனும் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்னுதான் மக்கள் எல்லோரும் நம்ம அம்மாவை பிரதமர் பதவிக்கு சரியா வருவாங்கனு முடிவெடுத்துருக்காங்க என்றால் கலகலப்பாகிவிடுகிறது.

இந்தி நடிகை மாதிரி…

இந்தி நடிகை மாதிரி…

எங்க ஊர் கிழவிகளெல்லாம் இப்போ ரொம்ப மினுமினுப்பா இந்தி நடிகை மாதிரி இருக்கு. எப்படினு எங்க பாட்டி கிட்டே கேட்டேன். 'அம்மா மாடு கொடுத்தாங்க. தினமும் பத்து லிட்டர் கறக்குது, அதுல அஞ்சு லிட்டரை டீக்கடைக்காரன் கிட்டே வித்துட்டு, மீதி அஞ்சு லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சி நானே குடிச்சுடுறேன்'னு சொல்லுது. அம்மா இவ்வளவு நல்லது செஞ்சாலும் அந்த கருணாநிதி உங்களை ஏமாத்தி ஓட்டு கேட்பார். நீங்க ஏமாந்துடாதீங்க' என்கிறார் அதிரடியாக.

ஐம்பூதங்களிலும் கொள்ளை

ஐம்பூதங்களிலும் கொள்ளை

டிவி செய்திவாசிப்பாளரும், நடிகையுமான பாத்திமாபாபுவோ, ''நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐம்பூதங்களிலும் கொள்ளையடித்தவர்கள் தி.மு.க.காரர்கள். அம்மா கொண்டுவந்த ஒவ்வொரு திட்டங்களும் ஏழை மக்களுக்குப் பயனளிக்கக் கூடியது. தன் குடும்ப நலனுக்காக ஆட்சி செய்தவர் கருணாநிதி.'' என்று பொளந்து கட்டுகிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
AIADMK has packed its campaigners’ list with names like actor-turned-politician R. Ramarajan, comedians Senthil, Singamuthu and Gundu Kalyanam, besides actress Vindhya, a popular star of yesteryear ‘Vennira Aadai’ Nirmala, and noted artiste C.R. Saraswathi also campaigning for the AIADMK supremo Jayalalithaa.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more