For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாதெல்லா விவகாரம்: ஜெயிச்சது எம்.ஐ.டி. தான் ஐ.ஐ.டி. இல்லை- இது ட்விட்டர் சண்டை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் சிஇஓ ஆனது குறித்து ட்விட்டரில் மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஐஐடி மாணவர்கள் இடையே காரசார விவாதம் நடந்துள்ளது.

ஐஐடி, ஐஐஎம் ஆகிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் தான் பெரிய நிலைமைக்கு வர முடியும் என்ற எண்ணம் இந்தியர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. இந்நிலையில் தான் மணிபால் பல்கலைக்கழகத்தில் படித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக ஆகியுள்ளார்.

இந்நிலையில் மணிபால் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஐஐடி மாணவர்களுக்கும் இடையே ட்விட்டரில் விவாதம் நடந்துள்ளது.

எம்.ஐ.டி.

எம்.ஐ.டி.

சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் சிஇஓவாக ஆகியுள்ளார். ஐஐடியை எம்.ஐ.டி. வென்றுவிடட்து. ஓகே சாரி என்று மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படிக்கும் தன்மயி ஸ்ரீவஸ்தவா ட்வீட் செய்துள்ளார்.

ஐஐடி

ஐஐடி

மைக்ரோசாப்ட் சிஇஓ நாதெல்லா ஐஐடி அல்ல மணிபாலில் படித்திருக்கிறார். வரி செலுத்துபவர்கள் யாரும் அவரது படிப்பு செலவை கவனித்துக் கொள்ளவில்லை. மேலும் பல எம்.ஐ.டி.க்கள் தேவை? என்று சஞ்சய் என்பவர் தெரிவித்துள்ளார்.

நாதெல்லா

நாதெல்லா

சத்யா நாதெல்லாவின் வளர்ச்சி மணிபால் பிராண்டுக்கு பல அதிசயங்களை செய்யும். இந்த ஒரு முறை ஐஐடியில் படித்தவர் அல்லாதவர் சாதித்துவிட்டார் என்று விவேக் சென்குப்தா என்பவர் தெரிவித்துள்ளார்.

கண்ணை திறங்க

கண்ணை திறங்க

சத்யாவின் விவகாரம் தங்கள் பிள்ளைகள் ஐஐடி மற்றும் ஐஐஎம்மில் தான் படிக்க வேண்டும் என்பவர்களின் கண்ணை திறந்து வைப்பது போன்று உள்ளது. நாதெல்லாவின் பெற்றோர் அவரது விருப்பப்படி படிக்க அனுமதி அளித்துள்ளனர் என்று அவர் படித்த ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலின் முதல்வர் கர்னல் ஆர்.எஸ். கத்ரி தெரிவித்துள்ளார்.

வெற்றி

வெற்றி

வெற்றி பெற ஐஐடியில் படித்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஐஐடியில் படித்தால் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அங்கு படித்தால் தான் வெற்றி பெற முடியும் என்றில்லை என ஐஐடி கான்பூர் மாணவர் அபிமன்யூ அரோரா தெரிவித்துள்ளார்.

பெருமை

பெருமை

ஐஐடியோ, எம்ஐடியோ அல்லது வேறு எந்த கல்வி நிறுவனமோ 300 பில்லியன் டாலர் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவராக நாதெல்லா ஆகியிருப்பது நமக்கெல்லாம் பெருமை என்று மகிழ்ச்சி அடைவோமே.

English summary
MIT students took to twitter to tell the world that it is not necessary to study in IIT, IIM to reach the top post. The best example is Microsoft CEO Satya Nadella who is from Manipal Institute of Technology and not IIT.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X