For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோமவார பௌர்ணமி இன்று ஐப்பசி அன்னாபிஷேகம்... சிவனை தரிசிப்போம்!

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று அனைத்து சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அன்னம் பரப்பிரம்மம்" என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

பிரசாதத்தை ப்ர+சாதம் என சொல்ல வேண்டும். சாதம் என்பது சாதாரண உணவு; ப்ர என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, 'பிரசாதம்' ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளிக்கின்றனர்.

Annabhishekam in Shiva Temples

அன்னாபிஷேகம் செய்வது ஏன்? என்பது ஜோதிடர் அஸ்ட்ரோ சுந்தரராஜன் என்பவர் விளக்கம் அளித்துள்ளார்.

அன்ன பூர்னே சதா பூர்னே சங்கர ப்ரான வல்லபே!

ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹிச்ச பார்வதி!!

தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. அன்னையோடு அறுசுவை உண்டிபோம் என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். இன்று அன்னாபிஷேகம் அனைவரும் மதியம் சிவாலயம் சென்று உச்சிகால பூஜையின் போது செய்யப்படும் அன்னாபிஷேகம் கண்டு நமக்கு படியளக்கும் அம்மையப்பன் அருள் பெருவோம்.

அன்னாபிஷேகம் பற்றி ஜோதிடத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில் அன்னம் எனப்படும் உணவிற்க்கான காரக கிரகம் சந்திரன். அன்னை எனப்படும் மாத்ரு காரகனும் சந்திரனேதான். நமக்கெல்லாம் படியளக்கும் அன்னப்பூரணியான பார்வதியை வணங்க காரக கிரகமும் சந்திரனேதான்.

இன்னும் சொல்லப்போனால் ஸ்ரீ மகாலக்ஷமியை கூட சந்திர ககோதரி என வேதம் குறிப்பிடுகிறது. மேலும் பாசம் அன்பு போன்ற உனர்ச்சிகளை குறிக்கும் கிரகமும் சந்திரனேதான். இன்னும் சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் பகலில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் மாத்ரு காரகன் எனவும் இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மாத்ரு காரகன் எனவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஆக சந்திரன் உச்சமாவதுகூட சுக்கிரனின் வீட்டில்தான். ஆக சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் எப்பொதும் ஒரு தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும். அப்படி இருப்பதுதான் நன்மையும் கூட.

எப்போதும் வீட்டிலிருக்கும் வரை தந்தைக்கு அன்னையின் உணவின் அருமை தெரிவதில்லை. ஆனால் வெளியில் சென்றிருக்கும்போது அது நன்றாக புரிந்துக்கொள்ளுவார். மேற்கூறிய கருத்தை உண்மையாக்கும்படி இன்றைய கிரகநிலை அமைந்திருப்பது விந்தையிலும் விந்தை.

தந்தையான சூரியன் இருப்பது சுக்கிரனின் வீடான துலா ராசியில். ஆனால் மாத்ரு காரகனான சந்திரன் பரணி நட்சத்திரத்தில் சுக்கிர சாராம்சம் பெற்று 180 பாகையில் சம சப்தமமாக நின்று மாத்ருகாரகனும் பித்ருகாரகனும் பௌர்ணமி யோகத்துடன் ஓருவரை ஒருவர் அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் என்பற்கிணங்க கிரக அமைவு பெற்ற சந்திர பலம் பெற்ற சோம வார பௌர்னமி தினத்தில் அன்னாபிஷேகம் கானும் அம்மையப்பரை தரிசித்து நலம் பல காண்போம். வாழ்க வளமுடன்.

English summary
Annabhishegam Festival, is an important ritual held in Lord Shiva Temples in Tamil Nadu. The ritual, dedicated to Lord Shiva, is performed for food security through prosperity of the farmland and increase in agricultural produce.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X