ஐந்தருவி படகு குழாமில் இன்று முதல் படகுகள் இயக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: குற்றாலத்தில் ஐந்தருவி படகு குழாமில் தண்ணீ்ர் நிறைந்ததை அடுத்து இன்று முதல் படகு சவாரி தொடங்கியது. குற்றாலத்தில் ஒரு வாரகாலமாக நல்ல சீசன் உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.

குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகள் தவிர பொழுதுபோக்காக படகு குழாம் உள்ளது. ஐந்தருவி அருகில் உள்ள சுற்றுலா துறைக்கு சொந்தமான படகு குழாமில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தண்ணீர் நிரம்பியதையடுத்து இன்று முதல் படகு சவாரி துவங்குகிறது.

Boat ride has started in the Five falls kuttralam

இதற்காக மொத்தம் 33 படகுகள் தயார் நிலையில் உள்ளது. இவற்றில் இரண்டு இருக்கை படகுகள் 12ம், நான்கு இருக்கை படகுகள் 12ம், நான்கு இருக்கை துடுப்பு படகுகள் 5ம், தனிநபர் படகுகள் 4 ம் உள்ளன. மேலும் பாதுகாப்பு கவச உடை ஆகியவை தேவையான அளவு இன்று காலை 11.30க்கு துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சந்திப் நத்தூரி ,நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டு படகு குழாமில் படகுபயணம் செய்தனர். அரை மணி நேரத்திற்கு படகுகட்டண விபரம்:2 இருக்கைபடகு ரூ.120, 4 இருக்கை படகு -150,தனிநபர் படகு 95.பேமிலி படகு-185 வசூலிக்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Boat ride has started in the Five falls kuttralam. There is a good season for last one week . The water pours well on all the waterfalls.
Please Wait while comments are loading...