ஏற்காடு விரைவு ரயிலில் குண்டு வெடிக்கும்.. புரளி கிளப்பியவரை கைது செய்தது போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கிளம்ப தயாராக இருந்த ஏற்காடு விரைவு ரயிலுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை ஈரோட்டில் வைத்து போலீசார் போலீசார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலை பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த ஏற்காடு விரைவு ரயிலில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

 bomb threat at Central railway station

இதனையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து நடத்திய சோதனையில் புரளி என கண்டறியப்பட்டது.

தொலைபேசி அழைப்பை ஆய்வு செய்ததில் ஈரோட்டில் இருந்து அசோக்குமார் என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
bomb threat at Central railway station, one person arrested in erode
Please Wait while comments are loading...