மதுரையில் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட சார் பதிவாளர்! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பத்திர பதிவுக்கு லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் கைது-வீடியோ

  மதுரை: மதுரை ஒத்தக்கடை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

  தமிழகத்திலேயே அதிகம் லஞ்சம் நடமாடும் அரசு துறைகளில் ஒன்று பத்திரப் பதிவுத்துறை. இங்கு தினமும் கோடிக்கணக்கில் பணம் புழங்குவதால் ஊழலும் அதிகளவில் நடக்கிறது.

  Bribe case - Sub registrar arrested in Madurai

  இந்நிலையில், மதுரை ஒத்தக்கடையில் உள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் அலுவலர்கள் லஞ்சம் பெறுகிறார்கள் என்ற ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்குக் கிடைத்தது. அதையடுத்து அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்றனர்.

  அப்போது அங்கு சார் பதிவாளர் ராஜூவை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் பத்திரப்பதிவு அலுவலகக்த்தில் பரபரப்பை ஏற்படுத்தியுது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  In Madurai sub registrar Raju was arrested in bribery case .

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற