For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“செங்கல் வார்க்கும் கருவி” கண்டுபிடித்து 7ம் வகுப்பு மாணவி சாதனை

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூரில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் செங்கலை வார்க்கும் கருவி ஒன்றினைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்த்தி. இவர் செங்கல்களை எளிய முறையில் வார்க்கும் கருவியை வடிவமைத்து கண்டுப்பிடித்துள்ளார்.

Brick strap tool - invent by a student

இந்த கருவியில் இரண்டு வீல் பொருத்தப்பட்டு அதில் செங்கல் தயாரிக்க தேவையான களி மண்களை கொட்ட டப்பா போன்ற ஒரு பகுதியை உருவாக்கி அதில் களி மண்ணை கொட்டி கையால் தள்ளினால் தானாக கீழ் பகுதியிலிருந்து களி மண் செங்கல் வடிவத்தில் நீளமாக வருகிறது. அதில் ஒரு பகுதியில் அளவுக்கு ஏற்றது போல் செங்கல் அறுத்து பிரிவது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதன் செயல் விளக்க நிகழச்சியை அவர் ஆலங்காடு செங்கல் சூளை பகுதியில் மாணவி செய்து காட்டினார். இதில் செங்கல் சூளை தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஆர்வத்துடன் மாணவியின் கண்டுபிடிப்பைப் பார்த்து வியந்தனர்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் உதவி தலைமை ஆசிரியர் ஆண்டனி அந்தோனி ராஜ், ஆசிரியர்கள் செல்வ சிதம்பரம், சாமிநாதன் ஆசிரியை முத்துலெட்சுமி மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டு மாணவி ஆர்த்தியைப் பாராட்டினர். மாணவி ஆர்த்தி கண்டுபிடித்த இந்த கருவி நாளை 11 ஆம் தேதி மன்னார்குடியில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் இடம் பெற இருக்கிறது.

English summary
Tiruvarur 7th standard student invent a Brick strap tool for ease cutting of bricks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X