கடலூர் அரசு மருத்துவமனையில் செல்போனை ஆட்டைய போட்டவர் கைது,, சிசிடிவி காட்சியால் சிக்கினார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  செல்போனை ஆட்டைய போட்டவர் சிசிடிவி காட்சியால் சிக்கினார்!-வீடியோ

  கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளி போல் உள்ளே சென்று டாக்டர் மற்றும் செவிலியர்களின் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர் ஒருவர் சிசிடிவி கேமரா மூலம் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செல்போன்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் எழுந்துவந்தது,

  போலீசார் ஆய்வு

  போலீசார் ஆய்வு

  இதைபோல் கடந்த 12ம் தேதி அவசர சிகிக்சை பிரிவில் இருந்த மருத்துவரின் விலைஉயர்ந்த செல்போனை திடீரென காணாமல் போனதால் அவர் போலீசில் புகார் அளித்தார்.இதனையடுத்து அவசர சிகிக்சை பிரிவில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

  டிப்டாப் ஆசாமி

  டிப்டாப் ஆசாமி

  அதில், அவசர சிகிச்சை பிரிவுக்குக் கடந்த 12ஆம் தேதி மதியம் ஒரு டிப்டாப் ஆசாமி உள்ளே வருகிறார். அப்போது பணியில் பெண் மருத்துவர் ஒருவர் மேஜை மீது கைப்பேசியும் வாட்டர் பாட்டிலும் வைத்தபடி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டுள்ளார். நோயாளியாக வந்த அந்த மர்ம நபர் அமரும் ஸ்டூலில் அமருகிறார். மருத்துவர் அவசரக் கேஸைப் பார்க்க எழுந்து விசாரித்துக் கொண்டிருந்தபோது, அந்த நபர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மேஜை மீதிருந்த செல்போனை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பதற்றமில்லாமல் நடந்துசெல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

  போலீசார் அதிரடி கைது

  போலீசார் அதிரடி கைது

  புதுநகர் காவல் நிலைய போலீஸார் அந்த நபரின் அடையாளத்தை வைத்து அவரை கைது செய்தனர். அந்த நபர் கடலூர் கம்பியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் மதுவுக்கு அடிமையானவர் என்று தெரிந்தது. குடிப்பதற்கான செலவுக்காகவே அவர் இப்படித் திருடுகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர் புதுச்சேரி எல்லையில் இருக்கும் சாராயக் கடையில் திருடிய செல்போன்களை விற்றுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

  தர்மஅடி வாங்கியவர்

  தர்மஅடி வாங்கியவர்

  அங்கு சென்ற போலீஸார் திருடிய செல்போனைப் பெற்றுக்கொண்டு அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர். திருடனைப் பற்றி விசாரித்ததில் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கைவரிசைகளைக் காட்டியுள்ளதும், சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் திருட முயன்றபோது பிடிபட்ட அவருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  On August 12, the police complained that the cellphone in the emergency department was missing. Accordingly, the police examined the scenes recorded in the CCTV camera in the emergency department. In that, a cell phone stolen record. Later the police arrested him.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற