For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்ப்பரேட்டுகளை வளர்த்து விவசாயிகளை அழிக்கும் மத்திய அரசு: டி. ராஜா சாடல்

இந்தியாவின் விவசாயிகளை மோடி அரசு வஞ்சிக்கிறது என்றும், அதே நேரத்தில் கார்ப்பரேட் முதலாளிகளை மத்திய அரசு வளர்க்கிறது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா சாடியுள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

திருச்சி: மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்திய விவசாயிகளை அழிவின் விளிம்புக்குத் தள்ளிவிட்டு கார்ப்பரேட் முதலாளிகளைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி. ராஜா கூறியதாவது:

தமிழகத்தில் வறட்சி அதிகரித்துள்ளது. விவசாயிகள் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். இதே நிலைதான் இந்தியா முழுவதும் உள்ளது.

விவசாயிக்லள் கடன்

விவசாயிக்லள் கடன்

அதே போல விவசயிகளை வங்கிக்கடன் பிரச்சனையும் வெகுவாகப் பாதித்துள்ளது. வாங்கிய கடன்களை திருப்பிக் கட்ட முடியாமல் விவசாயிகள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

நடவடிக்கை இல்லை

நடவடிக்கை இல்லை

அதிர்ச்சியிலும் மரணமடைந்துவிடுகிறார்கள்.இதையெல்லாம் மாற்ற மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இறங்காத மத்திய அரசு

இறங்காத மத்திய அரசு

டெல்லியில் கூட மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர் தமிழக விவசாயிகள். அப்போதுகூட மத்திய அரசு இறங்கிவரவில்லை.

கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை

கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை

ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வாரிவழங்கி வருகிறது. இதுதான் இன்றைய நிலை.

இவ்வாறு டி ராஜா கூறினார்.

English summary
D Raja (CPI) said agriculture in the country was in 'deep crisis'.Central BJP Govt. developing corporate sector and destroying farmers in india.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X