அஸ்வினியை குத்திவிட்டு ஓட முயன்ற அழகேசனை பிடித்து தூக்கிப்போட்டு மிதித்த பொதுமக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மாணவியை குத்திவிட்டு ஓட முயன்றவரை விரட்டி பிடித்த பொதுமக்கள்- வீடியோ

  சென்னை: கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்த மதுரவாயலை சேர்ந்த அழகேசனை பொதுமக்களே பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

  சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினி என்ற மாணவியை அழகேசன் குத்திக் கொலை செய்தார்.

  Chennai people thrash killer of a collage girl Ashwini

  இவர் மீது ஏற்கனவே மதுரவாயல் காவல் நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. எனவே அஸ்வினிக்கு இவர் தொடர்ந்து தொல்லை கொடுத்தவர் என்பது அம்பலமாகியுள்ளது.

  Chennai people thrash killer of a collage girl Ashwini

  இதனிடையே நுங்கம்பாக்கத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர் கொலை செய்யப்பட்டபோது பயந்து நின்ற பொதுமக்கள், இன்று பொங்கி எழுந்துவிட்டனர். கொலையை பார்த்ததும் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள், அழகேசனை பிடித்து, தர்ம அடி கொடுத்துள்ளனர். தூக்கிப்போட்டு மிதித்துள்ளனர்.

  இதன்பிறகு போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர். கொலையாளி அடிபட்டு விழுந்து கிடக்கும் காட்சி இப்போது வைரலாகியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai people thrash killer of a collage girl whilee he try to escape.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற