For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் சட்டென்று மாறிய வானிலை... இருட்டிக்கொண்டு நிற்கும் கருமேகங்கள்!

சென்னையில் காலை முதல் வெயில் தலைகாட்டிய நிலையில் திடீரென வானிலை மாறி கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு மழைக்கான அறிகுறிகளை காட்டுகின்றன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : சென்னையில் திடீரென வானிலை மாறி மழை மேகம் சூழ்ந்து கொண்டு வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் காலையில் வெயில் தலைகாட்டிய நிலையில் தற்போது வானம் இருட்டிக் கொண்டு நிற்பதால் இதமான சூழல் நிலவுகிறது.

தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வடகிழக்குப் பருவமழை டிசம்பர் 9 முதல் வெளுத்து வாங்கும் சென்னையில் வெள்ளம் கரைபுரண்டோடும் என்றெல்லாம் பஞ்
சாங்க கணிப்புகள் கூறின.

ஆனால் கனமழை இல்லை, லேசான மழை கூட இல்லாமல் டிசம்பர் 9 முதல் 14 வரை வானிலை இயல்பு நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

சென்னைப் புறநகர்களில் மழை

சென்னைப் புறநகர்களில் மழை

இன்று காலையிலேயே சென்னையின் புறநகர்ப் பகுதிகளான குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல கன மழை பெய்து பின்னர் ஓய்ந்தது. இதையும் சேருங்க. இதனையடுத்து தற்போது வானம் மேகமூட்டமாக உள்ளது. காலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

வானிலையில் திடீர் மாற்றம்

வானிலையில் திடீர் மாற்றம்

காலை 9 மணி முதல் வழக்கமாக நகரின் பெரும்பாலான இடங்களில் வெயில் தலைகாட்டிய நிலையில், திடீரென 12 மணிக்குப் பிறகு வானிலை சட்டென்று மாறியுள்ளது. வானில் கருமேகம் சூழ்ந்து கொண்டு மழை வருவதற்கான அறிகுறியாக மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் வார இறுதியில் இருக்கும் சென்னை மக்கள் இதமான சூழலை அனுபவித்து வருகின்றனர்.

சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

இந்நிலையில் இன்று முதல் டிசம்பர் 19ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலையை பொருத்த வரை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலையானது 31 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேர நிலவரம்

அடுத்த 24 மணி நேர நிலவரம்

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தூத்துக்கடி, கன்னியாகுமரி, தேனி, கோவையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Chennai's weather suddenly changed after 12 PM, a cloudy weather turns chennaities mood for a joyful weekend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X