For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படியிலிருந்து பயணி விழுந்தால், கண்டக்டர் உரிமம் ரத்து செய்யப்படும் - வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

Google Oneindia Tamil News

நாமக்கல்: பயணிகள் படியில் நின்றுகொண்டு பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டால் நடத்துநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பான பேருந்து பயணம் குறித்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் துரைசாமி, கருப்பண்ணன் ஆகியோர் பேசுகையில், "பேருந்து படிக்கட்டுகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்து அதனால் விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநரின் உரிமம் ரத்து செய்யப்படும்.

மேலும், பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் வகையில் திரைப்பட பாடல்களை ஒலிபரப்பக்கூடாது. காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது. பயணிகளை தரக்குறைவாக பேசக்கூடாது. ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் 200 க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
If a passenger fell down from steps and died in bus, Conductor's licence will be cancelled, officials says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X