For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவுக்கு ஆதரவு.. காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு

திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: திமுக எம்எல்ஏ-க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தப்படாமலேயே பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவு பெற்றது. இதைத் தொடர்ந்து திமுக கோரிக்கை மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் தமிழக சட்டசபை ஜூன் 14 முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை கூடுவதாக அறிவிக்கப்பட்டது.

Congress MLAs walk out from TN Assembly

அதன்படி சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு, கூவத்தூர் பேரம் உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகளுடன் திமுக எம்எல்ஏ-க்கள் சட்டசபைக்கு வந்தனர்.

அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூவை தெர்மாகோல், தெர்மாகோல் என்று எதிர்க்கட்சிகள் ஓட்டியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது. கூவத்தூரில் குதிரை பேரம் நடந்ததாக வெளியான வீடியோ குறித்து விவாதிக்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏ-க்கள் Mla for Sale என்ற பதாகைகளுடன் திமுக எம்எல்ஏ-க்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து சபாநாயகர் திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பெயரை படித்து அவரை வெளியேற்றுமாறு காவலர்களை கேட்டுக் கொண்டார்.

அதன்படி திமுக எம்எல்ஏ-க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Opposition leader MK Stalin raised the Kuvathur sting operation matter. DMK MLAs were evicted from the house. To supporting DMK, Congress MLAs themselves walked out from the house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X