For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீரென சிறிது நேரம் மயான அமைதியான வர்தா புயல் - சென்னை மூழ்கப் போவதாக பரவிய வதந்தியால் அச்சம்

வர்தா புயல் தாக்கத்தால் காற்று பலமாக வீசி பேயாட்டம் ஆடிய நிலையில் சிறிது நேரம் திடீரென பெரும் மயான அமைதியாக காற்று வீசாமல் இருந்தது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயலின் தாக்கத்தில், சென்னை நகரமே மூழ்கப் போகிறது என நாசா' எச்சரித்துள்ளதாக வாட்ஸ்ஆப்பில் புரளி ஒன்று வைரலாக பரவிய நிலையில் திடீரென மயான அமைதி நிலவியது பெரும் பீதியை ஏற்படுத்தியது.

சென்னைக்கு அருகே வர்தா புயல் அதிவேகமாக கரையை கடந்து வருகிறது. சென்னையில் பலத்த மழையுடன், பலத்த காற்று வீசியது.
புயலின் விட்டம் 90 கி.மீ எனவும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் பழவேற்காடு வரைக்கும் புயலின் நீளம் உள்ளது எனவும் கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.

வர்தா புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை மாநகரில் ஆங்காங்கே மரங்கள் முறிந்துள்ளன. மயிலாப்பூரில் மரங்கள் விழுந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

 சென்னை மூழ்குகிறதா?

சென்னை மூழ்குகிறதா?

இதனிடையே வர்தா புயலின் தாக்கத்தால் சென்னை நகரே மூழ்க போவதாக நாசா ஆய்வு மைய அலுவலகம் எச்சரித்துள்ளதாகவும், இதனால் சென்னையில் இருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான வேறு ஊர்களுக்கு சென்று விடுமாறும் வாட்ஸ்ஆப்பில் புரளி ஒன்று பரவி வருகிறது.

 அச்சம் தேவையில்லை

அச்சம் தேவையில்லை

மக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் எனவும், புயல் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 அமைதியான புயல்

அமைதியான புயல்

அடுத்த அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பு கருதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதே நேரத்தில் அம்மா கடற்கரையில் உறக்கம் கொள்வதால் வர்தா புயலே அமைதியாகிவிட்டதாகவும் தனி செய்தி ஒன்று உலா வருகிறது.

 பலத்த மழைக்கு வாய்ப்பு

பலத்த மழைக்கு வாய்ப்பு

புயலுக்கு முன் பெரும் அமைதி என்பார்கள். நள்ளிரவு முதல் காற்றுடன் கனமழை பெய்த நிலையில் காலை முதல் பலத்த காற்று வீசியது. இப்போது மயான அமைதி நிலவுகிறது. ஆனால் மேகக் கூட்டம் நகர்வதைப் பார்த்தால் பலத்த மழை பெய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 இயற்கை சீற்றம்

இயற்கை சீற்றம்

டிசம்பர் மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை இயற்கை சீற்றம் என்று ஏற்கனவே பஞ்சாங்கத்தில் கூறியுள்ளது. அதன்படி காற்றின் வேகமும், மழையும் கோரத்தாண்டவமாடியது. பிற்பகல் 3 மணிக்கு மேல் காற்றின்றி அமைதியாக மாறியது வானிலை. சென்னையில் சுனாமி தாக்கும் முன்பாக பறந்த பறவைகளைப் போல பல்லாயிரக்கணக்கான பறவைகள் வானில் வட்டமிட்டு எதையோ உணர்த்துகின்றன.

English summary
Ahead of Cyclone Vardah’s landfall, heavy rains pounded the entire north coastal Tamil Nadu. Now Chennai sudden silent.Thousands of birds are flying in Chennai sky.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X