குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுற்றுலா சென்றவர்கள் சிக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை : தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளதால் காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் சிக்கினர். இவர்களில் சிலர் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Death toll rises to 15 in Kurangani forest fire

எஞ்சியவர்கள் மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.

மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சக்திகலா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதே போன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேலம் எடப்பாடியைச் சேர்ந்த தேவி என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் காட்டுத் தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+