என் அத்தை ஜெயலலிதாவை சசி குடும்பத்தினர் கொலை செய்தது உண்மைதான்... ஆதாரம் இருக்கிறது - தீபா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் அத்தை ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மைதான். நேரம் வரும் போது ஆதாரங்களை வெளியிடுவேன் என ஜெ.தீபா கூறியுள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: போயல் கார்டன் இல்லம் நான் வாழ்ந்த வீடு. ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எனக்கு விருப்பமில்லை. அதை நான் அனுமதிக்க மாட்டேன். ஜெயலலிதா வாழ்ந்த வீடு கோவில் போல மதிக்கப்பட வேண்டும்.

Deepa Jayakumar accuses Sasikala, brother Deepak

என் காரில் கஞ்சா வைப்பதாக கூறி மிரட்டினார்கள். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் அதனால் பேசினேன். பாதிக்கப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்டு பேசினேன். இதுகுறித்து பிரதமரை சந்தித்து முறையிட உள்ளேன். அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பூசல்களால் எனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்தும் பிரதமரிடம் தெரிவிக்க உள்ளேன்.

இந்த அரசு நீடிக்க வேண்டிய அவசியமில்லை. என் அத்தை ஜெயலலிதாவை கொலை செய்தது உண்மைதான். தீபக்கும் சேர்ந்து கூட்டு சதி செய்து விட்டனர். இதன் பின்னணியில் சசிகலா குடும்பம் இருக்கிறது. ஆதாரங்களை நான் நேரம் வரும் போது வெளியிடுவேன். இவ்வாறு தீபா கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
J Jayalalithaa's niece, Deepa Jayakumar, accused her brother Deepak and political rival Sasikala of conspiring to kill the late Tamil Nadu chief minister jayalalithaa.
Please Wait while comments are loading...