மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் நவ.8 கண்டன ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை; மத்திய அரசின் பணமதிப்பிழப்புக்கு எதிரான திமுகவின் நவம்பர் 8-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பு வெளியாகி நவம்பர் 8-ந் தேதியுடன் ஓராண்டாகிறது.

DMK postpones protest against Centre

நவம்பர் 8-ந் தேதி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு தினமாக அனுசரிக்கின்றன. தமிழகம் முழுவதும் நவம்பர் 8-ந் தேதி திமுகவினர் கருப்பு உடையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவர் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மழை பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 8-ந் தேதியன்று நடைபெறாமல் ஒத்திவைக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK today postponed the Protest agains the Centre in 8 Districts which was affected by rain.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற