பணமதிப்பிழப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்பு தினமாக அனுசரித்து போராட்டம் நடத்தினர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனால் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை நினைவுப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் இந்நாளை கறுப்பு தினமாக கடைபிடிக்கின்றன.

 DMK protest over Tamilnadu against demonetization

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.

இதேபோல் திருச்சியில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

 DMK protest over Tamilnadu against demonetization

அப்போது பேசிய துரைமுருகன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பிரதமர் மோடி சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தார் என குற்றம்சாட்டினார். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கறுப்பு உடை அணிந்திருந்தனர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK protest over Tamilnadu against demonetization. Opponent parties following November 8th as a black day. In Madurai Staling headed protest.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற