For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பாவுக்கு விடுதலை பத்திரம் கொடுத்து விட்டு அதிமுகவில் சேருகிறார் கேகேஎஸ்ஆர்ஆர் மகன்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் அப்பாவுக்கு விடுதலை பத்திரம் கொடுத்துவிட்டு அதிமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாகப் பிளவுபட்ட போது ஜெயலலிதாவுக்கு பக்க பலமாக இருந்தவர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். பின்னர் ஜெயலலிதாவுடன் மோதல் ஏற்பட்டு திமுகவில் ஐக்கியமானார்.

DMK's KKSSR Ramachandran son to join ADMK?

திமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக சாத்தூர் ராமச்சந்திரனுக்கும் அவரது மகன்களுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ராமச்சந்திரன்.

அதுவரை அவரிடம் இருந்து விலகி இருந்த மகன் மீண்டும் ஒட்ட முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. தன்னுடைய தங்கை மகன் ராஜகுருவைத்தான் இப்போது தமக்கான வலதுகரமாக வைத்திருக்கிறாராம் ராமச்சந்திரன்.

இதனால் வேறுவழியின்றி அப்பாவுக்கு விடுதலைப் பத்திரம் கொடுத்துவிட்டு அ.தி.மு.க-வில் இணைய முடிவெடுத்திருக்கிறாராம் ரமேஷ்.

அதிமுகவில் இதேபோல் கோலோச்சிய தாமரைக்கனி திடீரென திமுகவுக்கு போனார். அவரது மகன் இன்பத் தமிழன், அதிமுவுக்கு வந்து அமைச்சராகவும் ஆனார். ஆனால் பின்னாளில் அவர் இருந்த இடமே தெரியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said that DMK Ex Minister KKSSR Ramachandran's son Ramesh deciding to join ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X