For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேட்பு மனு சர்ச்சை: ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றம்? ராஜேஷ் லக்கானி ஆலோசனை

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றுவது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    வேட்பு மனு சர்ச்சை: ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றம்? ராஜேஷ் லக்கானி ஆலோசனை- வீடியோ

    சென்னை: விஷால், தீபா வேட்பு மனு சர்ச்சைகளால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிகாரி வேலுச்சாமி மாற்றப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. சுயேட்சைகள் பலரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    தீபாவின் வேட்புமனு முறையாக நிரப்பப்படாத காரணத்தால் அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இதேபோல் நடிகர் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்ததில் 2 பேர் கையெழுத்து போலியானது என சர்ச்சை வெடித்தது.

    திடீர் நிராகரிப்பு

    திடீர் நிராகரிப்பு

    இதனால் விஷாலின் வேட்புமனு மீதான பரிசீலனை முதலில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் வேட்புமனு நிரகாரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

    விஷால் புகார்

    விஷால் புகார்

    இதை ஏற்க மறுத்து விஷால் சாலை மறியல் போராட்டம் நடத்தினார். மேலும் தம்மை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதாகவும் அது தொடர்பான ஆடியோ ஒன்றையும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் விஷால் கொடுத்திருந்தார்.

    இரவில் நிராகரிப்பு

    இரவில் நிராகரிப்பு

    இதை ஆராய்ந்த தேர்தல் அதிகாரி தமது வேட்புமனுவை ஏற்றுவிட்டார் என செய்தியாளர்களிடம் விஷால் கூறினார். ஆனால் இரவு 11 மணியளவில் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

    லக்கானி ஆலோசனை

    லக்கானி ஆலோசனை

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் விஷால் புகார் தெரிவித்துள்ளார். இத்தனை சர்ச்சைகளுக்குக் காரணமான தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Sourcses said that the Election Commission to change the Returning officer of RK Nagar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X