For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவிழ்கிறது எடப்பாடி ஆட்சி? அடுத்த முதல்வர் தினகரன்... பக்கா பிளான் ரெடி

எடப்பாடி அரசு விரைவில் கவிழ்க்கப்படும் என்றும் அதனால் அடுத்து ஸ்லீப்பர் செல்களின் ஆதரவுடன் தினகரன் அரியணை ஏற போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரன் அடுத்த முதல்வர் ஆகிறாரா ? ஸ்லீப்பர்செல்கள் மூலம் பக்கா பிளான் ரெடி

    சென்னை : எடப்பாடி அரசு விரைவில் கவிழ்க்கப்படும் என்றும் அதற்கடுத்து தமிழகத்தின் முதல்வராக தினகரன் அரியணை ஏறுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதிமுக இணைய வேண்டும் என்பதற்காக தினகரனையும், சசிகலாவையும் எடப்பாடி அணியினர் ஓரங்கட்டினர். இது அவர்களின் ஆதரவாளர்களை எரிச்சல் அடைய செய்தது. ஊழல் செய்யும் எடப்பாடி அரசு என்று புகார் கூறிய ஓபிஎஸ் அணியுடன் முதல்வர் அணி சேர்ந்தது அவர்களுக்கு உறுத்தியது.

    இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனுவாக கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று 18 பேரையும் சபாநாயகர் தனபால் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை எதிர்த்து தினகரன் அணியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு ஜனவரி 20-ஆம் தேதிக்குள் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தினகரன் ஆர்கே நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.

    ஆளும் கட்சி அதிர்ச்சி

    ஆளும் கட்சி அதிர்ச்சி

    தினகரன் 89,013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுவிட்டார். இது ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்நிலையில் அவர் எப்போது பேட்டி கொடுத்தாலும் ஸ்லீப்பர் செல்கள் குறித்து பேசுவார். அந்த வகையில் நேற்று பதவியேற்றுக் கொண்ட கையுடன் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

    ஆட்சி தப்பும்

    ஆட்சி தப்பும்

    அப்போது பேசிய தினகரன், 2 மாதத்துக்குள் இந்த எடப்பாடி தலைமையிலான அரசு கவிழும். அவ்வாறு கவிழாமல் இருக்க வேண்டுமானாலும் 5 அல்லது 6 பேரின் சுயநலத்துக்கு துணை போகாமல் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

    பெரும்பான்மை என்ன?

    பெரும்பான்மை என்ன?

    சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சேர்த்து 117 பேர் உள்ளனர். திமுகவினர் 89 பேரும், காங்கிரஸ் 8 பேரும், முஸ்லிம் லீக், சுயேச்சை தலா 1 என உள்ளது. 18 பேரின் தொகுதிகள் காலியானதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சட்டசபையில் மொத்தம் 216 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் 109 எம்எல்ஏக்களை உள்ள கட்சியே ஆட்சி அமைக்க தகுதி பெறும்.

    ஸ்லீப்பர் செல்கள்

    ஸ்லீப்பர் செல்கள்

    தினகரனுக்கு 50 -க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் செல்கள் ஆதரவாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. இது உண்மையெனில் தினகரனும் தற்போது எம்எல்ஏவாகி விட்டதால் எளிதாக இந்த ஆட்சி கலைக்கப்பட்டு அவர் முதல்வராக வாய்ப்புகள் அதிகம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

    மனதளவில் ஆதரவு

    மனதளவில் ஆதரவு

    தற்போது ஜனவரி 20-ஆம் தேதிக்குள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் அணிக்கு சாதகமாகவே வரும் என்று தெரிகிறது. அவ்வாறு வரும் பட்சத்தில் தினகரனுடன் சேர்த்து 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். தினகரன் சட்டசபைக்கு வந்துவிட்டால் அவர் கூறியது போல் 5 அல்லது 6 பேரை தவிர்த்து மற்றவர்கள் (100 பேர் என வைத்து கொள்வோம்) தினகரனுக்கு ஆதரவு தந்து அதிமுக அம்மா அணியின் சட்டசபை குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் தினகரன் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது.

    இதுதான் பக்கா பிளான்

    இதுதான் பக்கா பிளான்

    இதை மனதில் வைத்துக் கொண்டே நேற்றைய பேட்டியின்போது கூட 5 அல்லது 6 தான் தனக்கு எதிர்ப்பு என்றும் மற்றவர்கள் தனது ஸ்லீப்பர் செல்களே என்றும் சூசகமாக தினகரன் கூறிவிட்டார். இந்த வீயூகத்தை வைத்துதான் தினகரன் பக்காவாக பிளான் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார் என்கின்றனர்.

    English summary
    Edappadi government will be dissolved within few months. Dinakaran will become CM of Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X