எய்யா, ராசாக்களா.. எப்பய்யா திருந்துவீங்க....சின்ன குஷ்புவை பார்க்க ஈரோட்டை திணறடித்த ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு : தனியார் செல்போன் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஹன்சிகாவை பார்க்க ரசிகர்கள் திரண்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.

ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள தி சென்னை மொபைல்ஸ் கடையை நடிகை ஹன்சிகா மோத்வானி திறந்து வைப்பார் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் சின்ன குஷ்பு என்ற அடைமொழி கொண்ட நடிகை ஹன்சிகாவைக் காண ரசிகர்கள் காலை முதலே அந்தப் பகுதியில் திரண்டனர்.

காலை 9 மணி முதலே புதிய கடை திறப்பு அருகே சாலையில் ரசிகர்கள் கால்கடுக்கக் காத்துக்கிடந்தனர். திறப்பு விழாவிற்காக மஞ்சள் நிற சேலையில் வந்த ஹ்ன்சிகாவை ரசிகர்கள் விசில் பறக்க வரவேற்றுள்ளனர்.

 ரசிகர்களுடன் அளவளாவிய ஹன்சிகா

ரசிகர்களுடன் அளவளாவிய ஹன்சிகா

இதனையடுத்து கடைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி ரசிகர்களை பார்த்து கைகளை அசைத்து ஹன்சிகா மகிழ்ச்சி தெரிவித்தார். தொடர்ந்து ரசிகர்களை பார்த்து எப்படி இருக்கீங்கன்னு கேட்க அப்படியே சிலாகித்துப் போய்விட்டனர் ரசிகர்கள்.

புகைப்படம் எடுத்துத் தள்ளிய ரசிகர்கள்

மேடைக்கு அருகில் நின்ற ரசிகர்கள் அனைவரும் கையில் இருந்த செல்போனை வைத்து சகட்டு மேனிக்கு கிளிக்கித் தள்ளியுள்ளனர். செல்போன் கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வந்தவரையே தங்களது செல்போன்களில் அங்குலம் அங்குலமாக புகைப்படம் எடுத்து தீர்த்துவிட்டனர் ரசிகர்கள்.

 வாகன நெரிசல்

வாகன நெரிசல்

ரசிகர்கள் படையென திறண்டு வந்து நடிகையை பார்க்கக் குவிந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சொல்லப் போனால் நடிகை ஹன்சிகா வந்து செல்லும் நேரம் வரை அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளது, இதனால் கடுமையான வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

 எப்போது தீரும் இந்த மோகம்?

எப்போது தீரும் இந்த மோகம்?

திரைத்துறையினரை சினிமாவில் பார்த்து கொண்டாடும் ரசிகர்கள் அவர்களுக்கு பாலாபிஷேகம், கட்அவுட் என்று நேரத்தை வீணடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதன் அடுத்தகட்டமாகவே இது போன்று கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகளை பார்க்கக் காத்திருந்து தங்களது நேரத்தை வீணடிப்பது. ஹன்சிகாவைப் பார்ப்பதற்காக ஈரோட்டை திணறடித்த ரசிகர்கள் கூட்டத்தை பார்க்கும் போது சினிமா நடிகர்கள் மீது இருக்கும் மோகம் எப்போது தீரும் இவர்களுக்கு என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Hansika Mothwani at Erode The Chennai mobileshop inauguration, fans gathered massly at the event place and due to that heavy traffic arised.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற