தீபா சொத்து ஆவணங்களை பறிக்க போலி ஐடி ரெய்டு.... தப்பி ஓடிய மாதவன் 2-வது நாளாக தலைமறைவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தீபா கணவர் மாதவன் சொல்லித்தான் சென்றேன்- வீடியோ

  சென்னை: தீபாவின் சொத்து ஆவணங்களை பறிக்க போலி வருமான வரித்துறை அதிகாரியை அனுப்பிய அவரது கணவர் மாதவன் 2-வது நாளாக தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  சென்னையில் தீபாவின் வீட்டுக்குள் போலி வருமான வரித்துறை அதிகாரி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபாகரன் போலீசில் சரணடைந்தார்.

  Fake IT raid- Deepa Husban Madhavan abscond

  அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், தீபாவின் கணவர் மாதவனே தம்மை போலி அதிகாரியாக நடிக்க வைத்தார்; தீபாவிடம் இருந்து சொத்து ஆவணங்களை பறிக்க மாதவன் திட்டமிட்டிருந்தார் என திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதையடுத்து மாதவனை போலீசார் தேடி வருகின்றனர். மாதவன் போலீசிடம் சிக்காமல் தப்பி ஓடி 2-வது நாளாக தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai police is searching Deepa Husband Madhavan for fake IT Raid issue.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற