காற்றழுத்த தாழ்வு.. மன்னார் வளைகுடா மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப விமானம் மூலம் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மன்னார் வளைகுடா மீனவர்கள் கரை திரும்ப விமானம் மூலம் எச்சரிக்கை - வீடியோ

  சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என விமானம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  இதன் காரணமாக கன்னியாகுமரி கடற்பகுதியில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  விமானம் மூலம் எச்சரிக்கை

  விமானம் மூலம் எச்சரிக்கை

  இந்நிலையில் மன்னார் வளைகுடாவில் உள்ள மீனவர்களுக்கு விமானம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கரைதிரும்ப டோர்னியர் விமானம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  ஓகி புயல்

  ஓகி புயல்

  மேலும் ரோந்து பணியும் நடைபெற்று வருகிறது என்று இந்திய கடலோர காவல் படை தகவல் தெரிவித்துள்ளது. ஓகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் பலர் மாயமாகினர்.

  அரசின் அலட்சியம்

  அரசின் அலட்சியம்

  அவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அரசின் அலட்சியமே மீனவர்கள் உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

  முன்னெச்சரிக்கை

  முன்னெச்சரிக்கை

  இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறக்கூடும் என்பதால் தமிழக அரசு முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Fishermen in the Mannar Gulf have been alerted by the plane. Fishermen have been warned by a Dornier plane.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற