ஜிஎஸ்டி வரியைக் கண்டித்து 3-வது நாளாக பட்டாசு ஆலைகள் மூடல்! ரூ100 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் பாதிப

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகாசி: ஜிஎஸ்டி வரியைக் கண்டித்து 3-வது நாளாக பட்டாசு ஆலைகள் இன்றும் மூடப்பட்டுள்ளன. 3-வது நாளாக தொடரும் போராட்டத்தால் ரூ100 கோடிக்கும் மேல் பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு பட்டாசு ஆலைகள், பட்டாசு விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் 28% ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக பட்டாசு வர்த்தகத்தினர் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

GST issue: Sivakasi fireworks units continue shut shop

இந்த போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று 3-வது நாளாக நீடிக்கிறது. இதனால் கோவில்பட்டி, சிவகாசி மற்றும் குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் 811 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட பட்டாசு வர்த்தக நிறுவனங்களும் இப்போராட்டத்தில் குதித்துள்ளன.

கடந்த 3 நாட்களாக நீடிக்கும் போராட்டத்தால் ரூ100 கோடிக்கும் மேலாக பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 18% ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டு வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Manufactures of firecrackers units in Sivakasi continue an indefinite strike demanding rollback of the GST 28%.
Please Wait while comments are loading...