For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளா, கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், கனத்த மழை பெய்து வருகிறது. இதேபோல, அடுத்த இரு நாட்களுக்கு, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newest First Oldest First
7:10 PM, 18 Aug

2 லட்சம் கன அடிக்கு மேல் திறக்கப்படுவது மேட்டூர் அணை வரலாற்றில் இது 4வது முறை
7:09 PM, 18 Aug

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 2.05 லட்சம் கன அடி நீர் திறப்பு

கரையோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது

அணைக்கு விநாடிக்கு 1.85 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது

5:38 PM, 18 Aug

கேரளாவுக்கு ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி

கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரஜினி வழங்கினார்

4:00 PM, 18 Aug

வெள்ளத்தில் தத்தளிக்கும் செங்கனூர் தொகுதி

50 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாக தொகுதி எம்எல்ஏ சஜி செரியன் பரபரப்பு பேட்டி

எங்கள் தொகுதி மக்களை காப்பாற்றுங்கள்

உணவு, குடிநீரின்றி மக்கள் கடும் பாதிப்பு

ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்று 50,000 பேரை காப்பாற்றாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என அறிவிப்பு

3:37 PM, 18 Aug

ஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்
1:36 PM, 18 Aug

கேரள மாநிலத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும்- ராகுல் காந்தி

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

சிறிதும் தாமதமின்றி தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்

டுவிட்டரில் பிரதமரை வலியுறுத்திய ராகுல் காந்தி

1:06 PM, 18 Aug

கேரள வெள்ள நிவாரணம்.. தமிழக அரசு மேலும் ரூ. 5 கோடி நிதியுதவி

பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

தமிழக மருத்துவர்கள் குழுவும் கேரளா விரைகிறது - முதல்வர் எடப்பாடி

பல்வேறு பொருட்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்படுகின்றன - முதல்வர் அறிவிப்பு

12:26 PM, 18 Aug

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

11:33 AM, 18 Aug

கேரளாவைப் போல கர்நாடக மலை மாவட்டங்களிலும் பலத்த மழை

குடகு, தென் கனரா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் பலத்த மழை

11:30 AM, 18 Aug

கொள்ளிட கரையோரம் வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை படகுகள் மீட்கும் பணி தீவிரம்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளியை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

11:17 AM, 18 Aug

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.5 லட்சம் வழங்குவதாக மீன் விற்று படிக்கும் கேரள மாணவி அறிவிப்பு

கேரள கல்லூரி மாணவி ஹனான் வறுமை காரணமாக மீன் விற்றுக் கொண்டே படிக்கிறார்

தனக்கு கிடைத்த நன்கொடையிலிருந்து 1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு

11:09 AM, 18 Aug

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

சீர்காழி அருகே பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது

வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் தவிப்பு

10:58 AM, 18 Aug

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
10:51 AM, 18 Aug

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான்கான்
10:28 AM, 18 Aug

கேரளாவுக்கு மத்திய அரசு ரூ. 500 கோடி உதவி

பிரதமர் மோடி அறிவித்தார்

10:28 AM, 18 Aug

இன்னும் சில நிமிடங்களில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான் கான்

பஞ்சாப் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து பதவியேற்பு விழாவில் பங்கேற்பு

10:09 AM, 18 Aug

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் புகுந்தது வெள்ள நீர்

பம்பை ஆற்றின் நீர் சபரிமலை கோவிலுக்குள் புகுந்தது

கனமழை மற்றும் வெள்ளத்தால் சபரிமலை அய்யப்பன் கோவில் மூடல்

9:33 AM, 18 Aug

மோசமான வானிலையால் கொச்சி திரும்பிய மோடி

வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றார் மோடி

9:32 AM, 18 Aug

மேட்டூர் அணையிலிருந்து 1.90 லட்சம் கனஅடி நீர் திறப்பு

1.75 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் 1.90 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1.72 லட்சம் கனஅடியிலிருந்து 1.78 லட்சம் கனஅடியாக உயர்வு

9:31 AM, 18 Aug

காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை

9:10 AM, 18 Aug

கேரளாவுக்கு மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை

கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்

மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும்

தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

8:58 AM, 18 Aug

கேரளத்துக்கு தெலுங்கானா முதல்வர் 25 கோடி நிதியுதவி

2.5 கோடி மதிப்பிலான தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கவும் தெலுங்கானா முதல்வர் உத்தரவு

டெல்லி முதல்வர் 10 கோடி ரூபாய் நிதியுதவி

8:36 AM, 18 Aug

கேரளத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

பத்தினம்திட்டா மாவட்டத்தில் செங்கண்ணூர் பகுதியில் வீடு இடிந்தது

வெள்ளத்தால் வீடு இடிந்ததில் தாய், மகன், பேத்தி ஆகியோர் பலி

8:30 AM, 18 Aug

வீராணம் ஏரிக்கு நீர் வரத்து 46 அடியாக உள்ளது

வீராணத்திலிருந்து சென்னை குடிநீருக்கு 74 கனஅடி நீர் திறக்கப்படுகிறது

முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியில் இருந்து 2.34 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

8:30 AM, 18 Aug

மேட்டூர் அணையிலிருந்து 1.75 லட்சம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறப்பிலிருந்து 1.75 லட்சம் கனஅடி நீராக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு 1.70 லட்சம் கனஅடியிலிருந்து 1.72 லட்சம் கனஅடி நீர் வரத்து அதிகரித்துள்ளது

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.05 அடியாக உள்ளது

கிழக்கு மேற்றகு கால்வாய் பகுதிகளிலிருந்து பாசனத்துக்கு 800 கனஅடி நீர்க் திறப்பு

8:29 AM, 18 Aug

கேரளத்தில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட கொச்சி சென்றார் மோடி

கேரளத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிப்பு

English summary
Red alert has been sounded in and around Mettur dam and the PWD officials are releasing 1.75 lakh cucecs water from the dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X