For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சியை தக்க வைக்க பலே திட்டம்.. 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் அடுத்து என்ன?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கூறி மனு அளித்தனர். இதுகுறித்து அரசு கொறடா ராஜேந்திரன் இன்று கூறுகையில், தன்னிடம் தகவலே தெரிவிக்காமல் இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுத்ததாகவும், அவர்கள் அதிமுகவுக்கு விரோதமாக செயல்பட்டனர் என்றும் எனவே அவர்கள் பதவியை பறிக்க சபாநாயகரிடம் பரிந்துரை அளித்துள்ளதாகவும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி கொறடா புகார் அளிக்க காரணம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசை காப்பதுதான் இதன் நோக்கம்.

தமிழக சட்டசபையின் பலம் 234 எம்எல்ஏக்கள். அதில், ஜெயலலிதா மறைவை தொடர்ந்து 233 உறுப்பினர்கள்தான் உள்ளனர். எனவே இதில் பாதிக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பலம் இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும். அதன்படி ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தொடர குறைந்தது 117 எம்எல்ஏக்கள் தேவை.

பலம் குறைவு

பலம் குறைவு

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து வரும் எம்எல்ஏக்கள் பலம் 113ஆக உள்ளது. அதிலும் கூட அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி திடீரென எடப்பாடி பழனிச்சாமி அணியிலிருந்து விலகி, தனது ஆதரவு இப்போது யாருக்கும் இல்லை என இன்று கூறிவிட்டார். எனவே உண்மையிலேயே எடப்பாடி அரசுக்கு தற்போது 112 எம்எல்ஏக்கள் பலம்தான் உள்ளது. அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் மூவரும் கூட இப்போது எதையும் கூற முடியாது என கைவிரித்துவிட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி அரசு கவிழ்வது உறுதி. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளதால் ஆளுநருக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. எனவே அவர் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவாரோ என்ற அச்சம் ஆளும் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.

சட்டசபை பலம்

சட்டசபை பலம்

இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தால், சட்டசபை உறுப்பினர்கள் பலம், 214 என்று குறைந்துவிடும். இதில் பாதிக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் எடப்பாடி அரசு தப்பித்துவிடும். அதாவது 108 உறுப்பினர்கள் ஆதரவே போதும். அப்போது எடப்பாடி அரசு வேறு எந்த எம்எல்ஏக்கள் தயவையும் எதிர்பார்க்காமல் எளிதாக வெற்றி பெறும்.

ஆலோசனை

ஆலோசனை

சபாநாயகர் தனபாலை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீர் ஆலோசனை நடத்தியபோதே இந்த திட்டம் வகுக்கப்பட்டுவிட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. தனபாலுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும் முதல்வர் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜேந்திரன் அளித்துள்ள பரிந்துரை முக்கியத்துவம் பெறுகிறது.

முன் உதாரணம்

முன் உதாரணம்

இதேபோல எடியூரப்பா ஆட்சி காலத்தில் எதிர்ப்பு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார் கர்நாடக சபாநாயகர் போப்பய்யா. அதில் எடியூரப்பா அரசு வென்றது. இருப்பினும் தகுதி நீக்கம் செல்லாது என சுப்ரீம்கோர்ட் பிறகு தீர்ப்பளித்தது. ஆனால் அதற்குள் எடியூரப்பா ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் பதவியை துறக்க வேண்டியதாயிற்று. எனவே மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவை எழவில்லை. சதானந்தகவுடா முதல்வராக்கப்பட்டு ஆட்சி தொடர்ந்தது வரலாறு. எனவே ஒருவேளை அதிருப்தி எம்எல்ஏக்களை ஆளுநரை சந்தித்ததை வைத்து மட்டும் தகுதி நீக்கம் செய்தால் அதை உச்சநீதிமன்றம் ஏற்காது என்றே முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா போன்ற சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

English summary
Here is the reason why TN chief whip Rajendran recommends action against 19 MLAs who withdrew support to CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X