Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்பூர் டூ ஐஎஸ்ஐஎஸ்.. கல்லூரி மாணவர் சிக்கியது எப்படி! மோப்பம் பிடித்த 'RAW'! கண்காணிப்பில் கல்லூரி!

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் எப்படி அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்தார் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் சில இளைஞர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வெளிநாட்டில் இருக்கும் பயங்கரவாத கும்பல்களிடம் பழகி ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

இதனையடுத்து nia எனப்படும் தேசிய புலனாய்வு முகமை , உளவுத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

 இளைஞர் கைது

இளைஞர் கைது

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை சமூக வலைதளங்கள் மூலம் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் பேசியதாகவும் அவர்களது இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிகொள்ளை பகுதியைச் சேர்ந்த மிர் அனாஸ் அலி என்பவரை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கடந்த 30ஆம் தேதி அதிகாலையில் அதிரடியாக கைது செய்தனர்.

ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ்

அந்த மாணவரிடம் சுமார் 15 மணி நேரத்திற்கு நேராக நடைபெற்ற விசாரணையில் அவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர ஆர்வத்துடன் இருந்தது, இது தொடர்பாக பல நேரங்களில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் பேசி வந்ததாக தகவல் வெளியானது. இதனை அடுத்து அவரை கைது செய்த ஆம்பூர் நகர போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் கல்லூரி மாணவரான மிர் அனாஸ் அலி தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் சேர முயன்றது எப்படி என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சதித் திட்டம்

சதித் திட்டம்

பாகிஸ்தான் பங்களாதேஷ் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்ள அந்த குழுவில் உரையாடல்கள் சதி திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. அந்த ஆலோசனைகளில் அலி தொடர்ந்து பங்கெடுத்து வந்ததாகவும் இந்த செயல்பாடுகளை இந்திய உளவு அமைப்பான ரா கண்டுபிடித்த நிலையில் அதில் இருந்தவர்களை பட்டியலிட்டு சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் தான் இந்த ஆம்பூர் இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது.

தொடர் கண்காணிப்பு

தொடர் கண்காணிப்பு

கைது செய்யப்பட்டுள்ள மாணவர் படித்து வரும் கல்லூரியில் இருந்து ஏற்கனவே ஒரு இளைஞர் நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும் தற்போது அலி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில் அந்த கல்லூரி குறித்து தொடர்ந்து உளவுப் பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் இவரை போலவே வேறு பல இளைஞர்களையும் ஐஎஸ் அமைப்பு தேடி வருகிறது அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது என உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+