For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணு உலை மின் உற்பத்தி: தமிழகத்திற்கு எவ்வளவு மின்சாரம்?

Google Oneindia Tamil News

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகும் போது தமிழகத்திற்கு 925 மெகா வாட்டும், கேரளாவுக்கு 266 மெகாவாட்டும், புதுச்சேரிக்கு 67 மெகாவாட்டும் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாது கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம், அணு மின் நிலைய செயல்பாடுகளுக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது முதல் அணு உலையில் 160 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு நெல்லை அருகே அபிஷேகப்பட்டியில் உள்ள மின்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக மின் உற்பத்தி 400 மெகா வாட், 500, 750, 1000 மெகா வாட் என எட்டும் என்று அணு மின் நிலைய வாளக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

How much TN will get from KKNPP?

கூடங்குளத்தில் 2வது அணு உலையில் 96 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. 2வது அணு உலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிகிறது.

2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகும் போது தான் தமிழகத்திற்கு 925 மெகா வாட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Tamil Nadu will get 1000 mw power from Kudankulam only after the full fledged power production is attained,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X