இரு அணிகள் இணைப்பா.. எனக்கு எந்த தவலும் வரலையே.. ஓபிஎஸ் கிண்டல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரு அணிகள் இணைப்பு குறித்து தமக்கு எந்த தகவலும் வரவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அணிகள் இணைப்பு விரைவில் நடக்கும் என செய்திகள் வெளியாயின.

I didn't get any information about two teams join:OPS

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறும் என்று கூறினார். அமைச்சர் ஜெயக்குமாரும் பேச்சுக்வார்த்தைக்கான கதவு திறந்தே இருப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக அமைச்சர்கள் கூறிய தகவல் எதுவும் தமக்கு வரவில்லை என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former chief minister O.Paneerselvam said that i didn't get any information about two teams join.
Please Wait while comments are loading...