போயஸ் கார்டனில் நடந்த "ஆபரேசன் அமாவாசை".. பாஜக, ஈபிஎஸ் மீது அதிருப்தியில் ஜெ. விசுவாசிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெயலலிதாவின் அறை தவிர சல்லி சல்லியாக சலித்த அதிகாரிகள் - கடித பண்டல்களை எடுத்துச்சென்றது ஏன்?

  சென்னை:ஆபரேசன் கிளீன் பிளாக் மணி போயஸ்கார்டன் வீட்டில் அமாவாசை நாளில் நடத்தப்பட்டது. இந்த சோதனையால் ஜெயலலிதா விசுவாசிகள் பாஜக, ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

  ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு கடைசியில ஆளையே கடிச்ச கதையாக சசிகலா குடும்ப உறவினர்கள், சொந்தங்கள், பினாமிகள் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை ஜெயலலிதாவின் வீட்டிற்குள்ளேயே நடந்து விட்டதே என்பதுதான் அதிமுக தொண்டர்களின் வேதனையாக உள்ளது.

  அதிமுக என்ற கட்சியை அழித்து விட்டு பாஜக காலூன்ற நினைக்கிறது என்று தொண்டர்களிடையே ஒரு குமுறல் இருந்தாலும் இந்த ரெய்டு சம்பவம் தொண்டர்களை ரொம்பவே கடுப்பேற்றி விட்டது.

  ஆடிப்போன இளவரசி குடும்பம்

  ஆடிப்போன இளவரசி குடும்பம்

  பரோலில் வந்த சசிகலா பங்கு பிரித்து விட்டு போனதில் இருந்தே இந்த ஆபரேசனை முடிவு செய்து விட்டனர். கடந்த வியாழக்கிழமையன்று 187 இடங்களில் ரெய்டு நடந்தாலும் அதிகம் குடைந்தது விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா என இளவரசியின் வாரிசுகளைத்தான்.

  பதற்றமான சசிகலா

  பதற்றமான சசிகலா

  ரெய்டு சம்பவம் ஜெயாடிவி, நமது எம்ஜிஆர்,என தொடங்கி விவேக் வீட்டில் ஆழமாக வேறூன்றியது. தினகரன் போட்டுக்கொடுத்து விட்டார் என்று ஒரு சாரார் சொல்ல,இல்லை வைத்தியலிங்கம் என்று விவேக்கின் நண்பரே ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்தார்.

  அமாவாசை ஆபரேசன்

  அமாவாசை ஆபரேசன்

  கடந்த முறை போயஸ்கார்டனில் இருந்த பழைய ஜெயாடிவி அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. அப்போதே அமாவாசை ஆபரேசனுக்கு நாள் குறித்து விட்டார்களாம். விவேக், கிருஷ்ணபிரியா எல்லாம் தில்லாக பேட்டி கொடுத்தாலும், ஷகிலாவின் உளரல்தான் போயஸ்கார்டன் வீட்டை நோக்கி நகர்த்தியதாம்.

  சலித்த வருமானவரித்துறை

  சலித்த வருமானவரித்துறை

  மாலை நேரத்தில் வழக்கமாக வெளியே கிளம்புவது போல வந்து போயஸ்கார்டனுக்குள் அதிகாரிகள் நுழைந்தனர். இதன் பின்னரே பதறியடித்துக்கொண்டு விவேக் ஓடிவந்தார். ரெய்டு நடந்தது பூங்குன்றன் அறைதான் என்று சொல்லப்பட்டாலும், ஜெயலலிதாவின் அறை தவிர எல்லா இடங்களிலும் தேடினார்கள் அதிகாரிகள்.

  உயில், அப்பல்லோ சிடி

  உயில், அப்பல்லோ சிடி

  ஜெயலலிதாவின் உயில் ஒரு பென்டிரைவில் இருப்பதாக கூறி வருகின்றனர். அதேபோல ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வீடியோ எடுக்கப்பட்டு அது சிடி வடிவில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அந்த சிடியைத்தான் தேடுவதாக கூறியுள்ளார் திவாகரன். நேற்றைய ரெய்டில் பென்டிரைவ், லேப்டாப்பை எடுத்துச் சென்றுள்ளனர். அமாவாசை ஆபரேசனில் என்ன சிக்கியதோ என பதற்றமடைந்துள்ள சசி குடும்பத்தினர்.

  ஜெ., விசுவாசிகள் கோபம்

  ஜெ., விசுவாசிகள் கோபம்

  போயஸ்கார்டனுக்குள் வருமானவரித்துறை அதிகாரிகள் காலடி எடுத்து வைத்து ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் கோபத்தை சம்பாதித்துள்ளனர் மத்தியில் ஆளும் பாஜக. இந்த சோதனை முதல்வர் ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு தெரியாமலா நடந்திருக்கும் என்று கேட்கின்றனர். ரெய்டு நடந்த போது இருவருமே மதுரையில் இருந்தனர்.

  தொண்டர்களின் கோவில்

  தொண்டர்களின் கோவில்

  ஜெயலலிதா இருந்தவரை போயஸ்கார்டன் கேட்டின் அருகில் நிற்க கூட தயங்குவார்கள். மிகப்பெரிய தலைவர்கள் கூட மணிக்கணக்கில் காத்திருந்த காலம் ஒன்று உண்டு. அதிமுக தொண்டர்களின் கோவில்தான் ஜெயலலிதாவின் வேத நிலையம். இன்று அந்த கோவிலுக்குள்ளேயே இப்படி கலங்கப்படுத்தி விட்டனரே என்று கேட்கின்றனர் தொண்டர்கள். இதற்கு ஈபிஎஸ், ஓபிஎஸ்தான் பதிலளிக்க வேண்டும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Jayalalitha's ardent supporters are angry with BJP and team EPS for IT raids in Poes Garden.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற