நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கே சரியான தீர்வு - கீ.வீரமணி வலியுறுத்தல்
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே தீர்வாகும். அதுவே சமூக நீதியாகும் என திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு மட்டுமே விலக்கு என்பது தற்காலிகமான முதலுதவி போன்றதே. ஆனால், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஓராண்டுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அவசரச்சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தால், அதனை மத்திய அரசு ஏற்று, ஒப்புதல் வழங்கும் என மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததற்கு பதில் சொல்லும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு நோயாளிக்கு முதலுதவி அளிப்பது போன்றது. அதேநேரத்தில் நீட் நுழைவுத் தேர்வு அறவே கூடாது என்பதே தமிழ்நாட்டின் நிலை.இந்தியாவிலேயே சமூக நீதித் திசையில் முன்னுதாரணமான மாநிலம் தமிழ்நாடு.

69% இடஒதுக்கீடு
இங்கு 69 சதவீத இடஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாப்புப் பெற்றிருப்பது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான். இந்தப் பிரச்சனையில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு அதிக அக்கறை கொண்டதாகும்.

சட்டவிரோதம்
2007முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது. அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. கல்வி பொதுப்பட்டியலில் உள்ள நிலையில், நீட் தேர்வு குறித்து மாநில அரசின் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கேட்கப்படாமல் தன்னிச்சையாக மத்திய அரசு நீட்டைத் திணிப்பது சட்ட விரோதமானது.

சம நீதியாகுமா?
கிராமப்புற, நகர்ப்புற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே வகையான கல்வி இல்லாத நிலையில் சிபிஎஸ்இ கல்வித்திட்ட அடிப்படையில் வினாத்தாள் தயாரிப்பது எப்படி சம வாய்ப்பும், சம நீதியும் ஆகும்?

சிபிஎஸ்இ கேள்வித்தாளா?
நீட் தேர்வை தமிழ்நாட்டு மாணவர்கள் சந்திக்கத் தயங்குவது ஏன் என்றும், மாநிலக் கல்வித்திட்டத்தில் உள்ள திறன் குறைபாடே இதற்குக் காரணம் என்று சொல்லுவதும் சரியல்ல. சிபிஎஸ்இ அடிப்படையில் கேள்வித்தாளைத் தயாரித்துவிட்டு மாநிலக் கல்வித்திட்ட அடிப்படையில் படித்த மாணவர்கள் அதற்கு விடையளிக்கவேண்டும் என்று சொல்லுவதும், அந்த அடிப்படையில் தகுதியை நிர்ணயிப்பதும் எப்படி சரியாகும்?

2007ல் ஏன் அப்படி செஞ்சீங்க?
வருணாசிரமக் கண்ணோட்டத்தில் சிபிஎஸ்இ என்பது உயர்ந்தது என்பதும் மாநிலக் கல்வித் திட்டம் என்பது தாழ்ந்தது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. இன்றைக்கு நுழைவுத் தேர்வுக்கு வக்காலத்து வாங்கும் அனந்தகிருஷ்ணன் போன்றவர்கள்தான் 2007இல் நுழைவுத்தேர்வு கூடாது என்பதற்காக திட்டத்தைத் தயாரித்துக் கொடுத்த குழுவின் தலைவர் என்பதை மறந்துவிடக்கூடாது. சமூகநீதி கோருவது சலுகையல்ல. அது சட்டப்படியானது. மாநில அரசு இந்த ஆண்டு அதைப் பெற்றாலும்கூட, அதோடு நிறுத்தி விடக் கூடாது. ஆனால், இதுவரையிலே அந்தக் கோப்புகள் எங்கிருக்கின்றன என்று தெரியாது என்று சொன்ன அமைச்சர் இப்போது ஓராண்டுக்கு விதிவிலக்கு கொடுப்போம் என்று சொல்லும்போது மக்கள் சக்திக்கு இருக்கின்ற மரியாதையை இதன்மூலம் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.
இவ்வாறு கீ.வீரமணி கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications