ஆலயங்கள் நிறைந்த காஞ்சி மாவட்டத்தில் அரங்கேறும் படு கொலைகள்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 நாட்களில் 4பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்கள் அதிகம் நிறைந்த மாநிலம் காஞ்சிபுரம். இங்கு ரவுடிகள், கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்து விட்டது. இதனால் வெட்டு, குத்து கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. ரியல் எஸ்டேட் தகராறு தொடர்பான கொலைகள்தான் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

கூடுவாஞ்சேரியில் சமையலாளர்அருள் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சிறிது நேரத்தில் மன்னிவாக்கத்தில் புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் எம்.ஜி.முருகன் வெட்டி கொல்லப்பட்டார்.

புரட்சி பாரதம் நிர்வாகி படுகொலை

புரட்சி பாரதம் நிர்வாகி படுகொலை

சென்னை வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் எம்.ஜி. முருகன், புரட்சி பாரதம் கட்சியின் மண்ணிவாக்கம் ஊராட்சி செயலாளராகவும் காஞ்சி மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்தார். இவரது மனைவி துளசி ,40. இவர்களுக்கு சந்தியா என்ற மகளும், விக்னேஷ், விக்டர் என்ற மகன்களும் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு முருகன் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு வண்டலூரில் இருந்து மண்ணிவாக்கத்துக்கு மொபட்டில் சென்றார்.

ரத்த வெள்ளத்தில் மரணம்

ரத்த வெள்ளத்தில் மரணம்

அப்போது அவரது வீட்டின் அருகே சாலையோரத்தில் காரில் காத்திருந்த 8 பேர் கொண்ட கும்பல், திடீரென முருகனின் மொபட் மீது மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் எழுந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், அந்த கும்பல் துரத்தியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டேரி காவல்நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு முருகன் ஓடினார். ஆனால் கும்பல் முருகனை சுற்றி வளைத்து கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் முருகன் விழுந்து உயிரிழந்தார்.

அடுத்தடுத்து கொலைகள்

அடுத்தடுத்து கொலைகள்

தங்கையின் திருமணத்திற்கு வந்த அரக்கோணம் அடுத்த பள்ளிப்பட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் முடிவதற்குள் காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் ஊராட்சியை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் வீட்டின் அருகே நடந்து செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தொடர் கொலைகள்

தொடர் கொலைகள்

ஆலயங்களின் நகரமாக உலக அளவில் புகழ்பெற்ற ஆலயங்கள் அமைந்துள்ள மாவட்டம் தற்போது கொலைகள் அரங்கேற்றம் நடக்கும் மாவட்டமாக மாறி வருவது மக்களின் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Temple city Kanchipuram is becoming a city of murders as the killers make murder spree in the town.
Please Wait while comments are loading...