For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Kolathur Mani's detention under NSA quashed
சென்னை: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொளத்தூர் மணி மீதான கைது நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று திராவிடர் விடுதலை கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

அப்போது சேலத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ராஜேஷ்வரன், பி.எம்.பிரகாஷ் ஆகியோர் விசாரித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கொளத்தூர் மணியை கைது செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து இன்று தீர்ப்பளித்தனர்.

English summary
The Madras high court on Thursday quashed a state government order detaining Periyar Dravidar Kazhagam president Kolathur Mani under the National Security Act (NSA)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X