ரஜினி கட்சியை நோக்கி ஓடி வரும் திரையுலகம்.. அந்த நடிகை ரொம்ப ஆர்வமா இருக்காராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜனியின் க்ரீன் சிக்னலுக்காக காத்துக்கிடக்கும் நடிகை- வீடியோ

  சென்னை: ரஜினி கட்சியில் பெரிய பெரிய பிரபலங்கள் எல்லாம் சேரப் போவதாக பேச்சு அடிபடுகிறது. குறிப்பாக சினிமாக்காரர்கள் பெரிய அளவில் வந்து குவிய காத்துள்ளனராம்.

  பெரிய பெரிய நடிகைகள் எல்லாம் ரஜினி கட்சியில் இணைந்து கொள்கைப் பிடிப்போடு மக்கள் பணியாற்ற ஆர்வத்துடன் காத்துள்ளனராம். ரஜினியின் பெர்மிஷனுக்காக வெயிட்டிங்கில் உள்ளனராம்.

  இவர்களில் விரல் விட்டும் எண்ணும் அளவிலான நடிகைகள் மட்டுமே ஓரளவு சுமாரான மார்க்கெட்டில் இருப்பவர்கள். மற்றவர்கள் எல்லாம் பட வாய்ப்பு படுத்து விட்ட மார்க்கெட் போன நடிகைகளாம்.

  ரஜினி கட்சி ரஜினி கட்சி

  ரஜினி கட்சி ரஜினி கட்சி

  எப்படா ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று ஆயாசத்துடன் காத்திருந்தவர்களுக்கு வாயில் பாயாசம் ஊற்றிய கதையாக மாறியுள்ளது ரஜினியின் அரசியல் அறிவிப்பு. சோர்ந்து கிடந்தவர்களைத் தூக்கி நிறுத்தி விட்டார் ரஜினி. செம உற்சாகமடைந்துள்ளனர் ரஜினி கட்சிக்காக காத்துக் கிடந்தவர்கள்.

  பஸ்ஸுக்காக காத்திருப்போர் போல

  பஸ்ஸுக்காக காத்திருப்போர் போல

  ரொம்ப நேரமாக பஸ்ஸை எதிர்பார்த்துக் காணாமல் டயர்டாகி, திடீரென அந்த பஸ் வந்தால் எப்படி உற்சாகத்தோடு அடித்துப் பிடித்துக் கொண்டு ஏற ஓடுவோமோ அதே போன்ற மன நிலையில் பலர் உள்ளனராம் ரஜினி கட்சியில் இணைய. குறிப்பாக திரைத்துறையினர்.

  நடிகைகள் பெரும் ஆர்வம்

  நடிகைகள் பெரும் ஆர்வம்

  ரஜினியின் கட்சியில் இணைய நடிகர்களை விட நடிகைகள் மத்தியில்தான் பெரும் ஆர்வம் காணப்படுகிறதாம். ரஜினியுடன் ஜோடி போட்ட அந்த முக்கிய நடிகை இதில் முதல் வரிசையில் நிற்கிறாராம். அவர்தான் இப்போது தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாரும் கூட. புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் ஒத்தி வைத்துள்ளாராம் இந்த நடிகை. ரஜினி ஓகே சொல்லி விட்டால் அடுத்த நொடியில் கட்சியில் இணைய காத்திருக்கிறாராம்.

  சினிமாக் கம்பெனி மாதிரி ஆயிடாம

  சினிமாக் கம்பெனி மாதிரி ஆயிடாம

  ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் (நடிகைகள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர்) ரஜினி கட்சியில் இணைய ஆர்வமாக உள்ளதால் இவர்களில் எத்தனை பேரை ரஜினி கட்சியில் சேர்ப்பார் என்று தெரியவில்லை. சினிமாக்காரர்களுக்கு கட்சியில் இடம் இல்லை என்றும் சொல்ல முடியாது. காரணம், ரஜினியே சினிமாவிலிருந்துதான் அரசியலுக்கு வருகிறார். எனவே ரஜினி எப்படி இதில் முடிவெடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

  அதான் சுளையா 3 வருஷம் டைம் இருக்கே..!

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  According to a source, almost all the leading Cine stars in Tamil cinema are ready to join Rajini's new political party. They are all awaiting for his green signal, says the source.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X